நாளை ஆடி 18: இந்த 5 வகை சாதம் ரெடி பண்ணுங்க: ஈஸியா செய்து முடிக்க ரெசிபி இதோ

நாளை ஆடி 18-ஐ முன்னிட்டு இறைவனுக்கு இந்த 5 வகை சாதத்தை செய்து படையலிட வேண்டும்.

நாளை ஆடி 18-ஐ முன்னிட்டு இறைவனுக்கு இந்த 5 வகை சாதத்தை செய்து படையலிட வேண்டும்.

author-image
WebDesk
New Update
sasa

நாளை ஆடி 18-ஐ முன்னிட்டு இறைவனுக்கு இந்த 5 வகை சாதத்தை செய்து படையலிட வேண்டும். முதலில் நாம் புளியோதரையை செய்து கொள்ளலாம். இந்த ரெசிபி போல் நீங்களும் ரெடி செய்து கொள்ளலாம். 

Advertisment

sadaa


தேவையான பொருட்கள்
2 ஸ்பூன் மிளகு 
2 ஸ்பூன் கருப்பு எள்ளு  
2 ஸ்பூன் கடுகு 
அரை ஸ்பூன் வெந்தயம் 
100 எம்.எல் நல்லெண்ணை 
4 வத்தல்
1 ஸ்பூன் கடலை பருப்பு 
1 கைபிடி வேர்கடலை 
100 கிராம் புளி 
கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
2 ஸ்பூன் மிளகாய் தூள்
200 எம்.எல் தண்ணீர் 
1 ½ கப் வேக வைத்த சாதம்

செய்முறை : ஒரு பாத்திரத்தில் மிளகு சேர்த்து நன்றாக வறுக்கவும். நன்றாக வறுபட்டதும் தனியாக எடுத்து வைக்கவும். தொடர்ந்து இதுபோல கடுகு, எள்ளு, வெந்தயத்தை  ஆகியவற்றை தனியாக வறுக்க வேண்டும். இவை அனைத்தையும் பொடியாக அரைத்துகொள்ளவும். ஒரு நல்லெண்ணை சேர்த்து , வத்தல், கடலை பருப்பு , வேர்கடலையை சேர்த்து நன்றாக கிளர வேண்டும். நிறம் மாறியதும் புளி கரைத்தது சேர்க்கவும். தொடர்ந்து இதில் மஞ்சள் பொடி, மிளகாய் தூள் சேர்த்து, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். புளியின் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்க வேண்டும், தொடர்ந்து உப்பு சேர்க்கவும். தொடர்ந்து பெருங்காயத்தூள் சேர்க்கவும். அரைத்த வைத்திருந்த பொடியை 3 ஸ்பூன் சேர்க்கவும். தொடர்ந்து இதில் நாம் வேக வைத்த சாதத்தை சேர்த்து கிளரவும். 

Advertisment
Advertisements

 

saasadaa

இரண்டாவதாக நாம் கற்கண்டு சாதம் செய்ய வேண்டும்.  அதை  ஈஸியா இப்படி செய்யலாம்.
தேவையான பொருட்கள் 
200 கிராம் பச்சரிசி 
200 கிராம் கற்கண்டு 
4 ஸ்பூன் நெய் 
4 ஏலக்காய் 
2 ஸ்பூன் முந்திரி
செய்முறை :பச்சரிசியை நன்றாக கழுவ வேண்டும். அதில் ஒரு கப் பால் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து 2 விசில் விட்டு எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து அதில் முந்திரி சேர்த்து வறுக்கவும். குக்கரில் இருக்கும் சாதத்துடன் கற்கண்டு சேர்க்கவும். வறுத்த முந்திரியை சேர்க்கவும் . தொடர்ந்து நெய் சேர்த்து கிளரவும். தொடர்ந்து ஏலக்காய் தூள் சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து நெய் சேர்த்து கிளரவும். வேண்டும் என்றால் நாம் அதிகம் நெய் சேர்த்து கிளரலாம்.

 

sasaeda

3-வதாக நாம் எலுமிச்சை சாதத்தை செய்ய வேண்டும். இந்நிலையில் இந்த மிக்ஸ் செய்து, அதில் வேக வைத்த சாத்தை கலக்க வேண்டும். 
தேவையான பொருட்கள் 
கால் கப் நல்லெண்ணை 
1 ஸ்பூன் கடுகு 
2 ஸ்பூன் கடலை பருப்பு 
கால் கப் வேர்கடலை 
2 கொத்து கருவேப்பிலை 
5 பச்சை மிளகாய் 
5 வர மிளகாய் 
பெருங்காயாம் கால் ஸ்பூன் 
1 ஸ்பூன் உப்பு 
2 ஸ்பூன் மஞ்சள் பொடி 
எலுமிச்சை சாறு அரை கப் 
2 கப் வேக வைத்த சாதம் 
செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, கடுகு, கடலை பருப்பு, வேர்கடலை, பச்சை மிளகாய், வர மிளகாய், பெருங்காயம், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கிளரவும்.  தொடர்ந்து இதில் எலுமிச்சை சாறு சேர்த்து கிளரவும். இந்த மிக்ஸை வேக வைத்த சாதத்தில் சேர்த்து கிளரினால் எலுமிச்சை சாதம் ரெடி. 

 

edaa

4-வதாக நாம் தேங்காய் சாதத்தை செய்ய வேண்டும். இதற்கான ரெசிபொ இதோ. 
தேவையான பொருட்கள்
அவித்த சாதம்- 2 கப்
துருவிய தேங்காய்- அரை கப்
கடுகு- 1 ஸ்பூன் 
உளுந்து பருப்பு- அரை ஸ்பூன் 
கடலைப் பருப்பு- அரை ஸ்பூன் 
சீரகம்- 1ஸ்பூன் 
 வரமிளகாய்- 3 
கறிவேப்பிலை- 2 கொத்து 
பெங்காயம்- கால் ஸ்பூன் 
தேங்காய் எண்ணெய்- 4 ஸ்பூன் 
உப்பு
செய்முறை
அவித்த சாதம் இருந்தால், நேடியாகவே ரெசிபிக்கு சென்றுவிடலாம். நீங்கள் புதிதாக சாதம் வைக்க வேண்டு என்று தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து சாதம் வைத்து கொள்ளுங்கள். இது மேலும் தேங்காய் சாதத்தை சுவையாக்கும். இப்போது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிப்புக்கான பொருட்களை போட்டு வறுக்க வேண்டும். வடித்த சாதத்தை சேர்த்து கிளரவும். தொடர்து தனியாக வறுத்த தேங்காய் சேர்த்துகொள்ளவும். சில நிமிடங்கள் வரை கிளரவும். தேங்காய் சாதம் ரெடி.

 

sasasa

5-வதாக நாம் தயிர் சாதத்தை செய்ய வேண்டும். அதன் ரெசிபி இதோ. 
தேவையான பொருட்கள்
3 கப் ரைஸ் 
1 கப் தயிர்
அரை கப் பால் 
கால் கப் பிரஷ் க்ரீம் 
உப்பு 
10 சின்ன வெங்காயம் நறுக்கியது 
2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
செய்முறை :  அரிசியை நன்றாக குழைவாக வேக வைக்கவும். தொடர்ந்து அதில் பாலை சேர்த்து கிளரவும். தொடர்ந்து தயிரை சேர்த்து கிளரவும். தொடர்ந்து பிரஷ் க்ரீம் சேர்த்து கிளரவும். தொடர்ந்து உப்பு சேர்த்து கிளரவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து அதை தயிர் சாதம் மீது சேர்த்து பரிமாறவும்.  

 

 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: