பருப்பு
குக்கரில், 2 கப் கருப்பு, அரை ஸ்பூன் மஞ்சள் பொடி, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். இதில் எண்ணெய், சீரகம், கடுகு, காய்ந்த மிளகாய், 2 தக்களி நறுக்கியது சேர்த்து வதக்கி இதில் கொட்டவும்.
வெண்டைக்காய் காரக் குழம்பு
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதில், வெங்காய வடகம், வத்தல், கட்டி பெருங்காயம் சேர்த்து கிளர வேண்டும். தொடர்ந்து சின்ன வெங்காயம், கருவேப்பிலை, இடித்த பூண்டு சேர்த்து கிளரவும். வெங்காயம் நிறம் மாறியதும். அதில் தக்காளி அரைத்ததை சேர்க்கவும். தொடர்ந்து சாம்பார் பொடி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும். எண்ணெய் பிரிந்து வந்ததும், புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். கடைசியாக உப்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து 5 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும்.
சேனை ப்ரை
முதலில் சேனையை நன்றாக கழுவி ,நன்றாக நறுக்க வேண்டும். தொடர்ந்து அதில் மஞ்சள் பொடி, சாம்பார் பொடி, உப்பு போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி. அதில் கடுகு, பூண்டு சேர்த்து, இந்த சேனையை சேர்த்து வறுக்கவும். சுவையான சேனை வறுவல் ரெடி.
தக்காளி கூட்டு
பாசி பருப்பை கழுவி குக்கரில் 4 விசில் விட்டு வேக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 3 ஸ்பூன் எண்ணெய், கடுகு, சோம்பு சேர்த்ததும். வெங்காயம் சேர்த்து வதக்கவும். 2 நிமிசங்கள் வரை வதக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி- பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். தக்காளியை சேர்க்கவும். தொடர்ந்து 10 நிமிடங்கள் வதக்கவும். தொடர்ந்து இதில் மஞ்சள் தூள் சேர்க்கவும். நன்றாக வதங்கியதும், உப்பு, சாம்பார் பொடி, சேர்க்கவும். தொடர்ந்து இதை கிளரவும். தற்போது வேக வைத்த பருப்பை, இதில் சேர்க்கவும். 2 நிமிடங்கள் கொதிக்க விடவும். கடைசியாக கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும்.
பருப்பு வடை
கடலை பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும். இதில் ஒரு கைபிடி கடலை பருப்பை தனியாக எடுத்து வைக்கவும். மிக்ஸியில் ஊற வைத்த கடலை பருப்பு, சீரகம், வத்தல், இஞ்சி , பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துகொள்ளவும். இதை ஒரு பாத்திரத்தில் மாற்றவும். தொடர்ந்து அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கியது, புதினா- கொத்தமல்லி, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடானதும் பருப்பு மசாலா வடை போட்டு பொறித்து எடுக்கவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.