தற்போது நிறைய பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருக்கிறது. குறிப்பாக, வயது பேதமின்றி இளம் வயதினர் பலரும் இதனால் அவதிப்படுகின்றனர். அந்த வகையில் சர்க்கரை நோயாளிகள் குடிக்க வேண்டிய பால் பற்றி டாக்டர் ஆஷா லெனின் தனியார் சேனல் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.
Advertisment
புளிச்ச பாலில் இருந்து எடுக்கப்படும் கேஃபிர் என்பது புளிப்பு சுவை கொண்டடு. இது எலும்பு ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு அமைப்பு மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கேஃபிர் பால் மற்றும் நீர் வெவ்வேறு தானியங்களிலிருந்தும் தயாரிக்கப்படுகின்றன மற்றும் வெவ்வேறு பண்புகளைக் கொண்டுள்ளன என்றும் அவர் கூறுகிறார்.
இவை சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. கேஃபிர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. கேஃபிர் நீரிழிவு மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும்.
கெஃபிர் புரோபயாடிக்குகள் நல்ல குடல் பாக்டீரியாவின் சமநிலையை தக்கவைக்க உதவுகிறது. குடல் சார்ந்த பிரச்சனைகள் செரிமான கோளாறுகளையும் சரிசெய்ய உதவும். நல்ல தூக்கம், நல்ல செரிமானம் என உடம்பில் நல்ல முன்னேற்றம் தெரியும்.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.