மூன்று மாதம் வரை கெட்டுபோகாத பாலை ஆவின் அறிமுகம் செய்துள்ளது.
ஆவினின் இந்த டிலைட் பிராண்ட் பாலை 90 நாட்கள் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்காமலே பாதுகாக்க முடியும். இந்நிலையில் இது மற்ற பால் வகைகளை போல சத்து கொண்டது என்று ஆவின் தெரிவித்துள்ளது.
பாஸ்டுரைசேசன் (pasteurization) என்ற முறை மூலம் பாலை 60 டிகிரி முதல் 70 டிகிரி வரை சூடாக்குவார்கள். இதனால் பொதுவாக நாம் வாங்கும் பால், 2 முதல் 3 நாட்கள் வரை கெட்டுப்போகாது. இது வழக்கமாக நடக்கும் செயல்முறை.
இந்நிலையில் ஆவினின் இந்த டிலைட் பிளாட், யுடிஎச் ( UTH) முறையை பயன்படுத்தி பாலை 100 டிகிரியில் சூடுபடுத்துவார்கள். சிறிது நேரம் மட்டுமே இப்படி செய்வார்கள். இதனால் நுண்ணுயிரிகளும் வளராது. இந்நிலையில் இந்த பால் பாக்கெட் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட 7 லேயர் கவர் பயன்படுத்தப்படுகிறது. இதனால் சூரிய ஒளி இதில் புகாது. இந்நிலையில் இதுபோல ஒரு நீண்ட நாள் வரை கெடாத பாலை சேலத்தில் ஆவின் அறிமுகம் செய்தது. ஆனால் சில நாட்களில் அது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஆவின் டிலைட் பால் அறிமுகமாகி உள்ளது. தற்போது 500 எம்எல் பால் ரூ. 30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் 3.5 % கொழுப்பு, 8.5% கொழுப்பு நிறைந்த இரண்டு வகைகள் உள்ளது.