அமிலத்தன்மை Vs காரத்தன்மை: கோடை காலத்திற்கு ஏற்ற உணவு எது?

நமது குடல் ஆரோக்கியத்தில் pH அளவு எவ்வாறு பங்கு வகிக்கிறது என்பதை அறிந்து கொள்வதன் மூலம் எந்த வகையான உணவு நமக்கு பொருத்தமாக இருக்கும் என தெரிந்து கொள்ளலாம்.

நமது குடல் ஆரோக்கியத்தில் pH அளவு எவ்வாறு பங்கு வகிக்கிறது என்பதை அறிந்து கொள்வதன் மூலம் எந்த வகையான உணவு நமக்கு பொருத்தமாக இருக்கும் என தெரிந்து கொள்ளலாம்.

author-image
WebDesk
New Update
Acidic Vs Alkaline

பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் ஆகியவை அடங்கிய சமச்சீர் உணவை உட்கொள்வதன் முக்கியத்துவத்தை நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். அதனுடன், இறைச்சி, பால் பொருட்கள் மற்றும் தானியங்களை சரியான அளவில் எடுத்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமான pH அளவை பராமரிக்க உதவும். ஆனால் நமது குடல் ஆரோக்கியத்தில் pH அளவு எவ்வாறு பங்கு வகிக்கிறது?

Advertisment

 

 

Advertisment
Advertisements

"அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மை ஆகியவை நமது ஆரோக்கியத்தை நிர்வகிக்கும் செயல்முறைகளுக்கு அடிப்படையான பண்புகளாகும். அவை pH அளவைக் குறிக்கின்றன.  இது 0 முதல் 14 வரையில் இருக்கிறது. 7 என்பது நடுநிலைமையைக் குறிக்கிறது. 7-க்கு குறைவான pH அமிலத்தன்மையாகக் கருதப்படுகிறது. அதே நேரத்தில், 7-க்கு அதிகமான pH காரத்தன்மை கொண்டது" என்று ஊட்டச்சத்து நிபுணரான உஷாகிரன் சிசோடியா கூறுகிறார். 

சமநிலையை பராமரிப்பது ஏன் முக்கியம்?

"இந்த நுட்பமான சமநிலை, நொதிகளின் சரியான செயல்பாட்டிற்கு அடிப்படையானது. இவை செரிமானம் மற்றும் பிற வளர்சிதை மாற்ற செயல்முறைகளுக்கு இன்றியமையாதவை. pH சமநிலை உடலின் ஊட்டச்சத்துகளை திறம்பட உறிஞ்சும் திறனில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது நச்சு நீக்கத்திற்கும் உதவுகிறது. இதனால் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க முடியும்" என்று சிசோடியா பகிர்ந்து குறிப்பிட்டுள்ளார்.

கோடை காலத்திற்கு பொருத்தமானது எது?

புளிப்பு வகையான பழங்கள், ஊறுகாய், வினிகர் சார்ந்த சாஸ்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, அதிகப்படியான காஃபின் மற்றும் ஆல்கஹால் போன்ற அமில உணவுகள் நீரிழப்பு விளைவைக் கொண்டுள்ளன. மேலும், உடலில் வெப்பம் மற்றும் அமில உற்பத்தியை அதிகரிக்கும் என்று மருத்துவர் லீனா சஜு தெரிவித்துள்ளார். இது லேசான எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வுகளுக்கும், மெதுவான செரிமானத்திற்கும் வழிவகுக்கும்.

காரத்தன்மை கொண்ட உணவுகள் கோடை காலத்திற்கு பொருத்தமானது என்று மருத்துவர் சஞ்சு தெரிவித்துள்ளார். காரத்தன்மை கொண்ட உணவுகள் நீர்ச்சத்து நிறைந்தவை. அவை உடலுக்கு நீரேற்றம் மற்றும் குளிர்ச்சியை அளிக்கின்றன. இது செரிமானத்திற்கு எளிதாக இருக்கும். "காரத்தன்மை உணவுகள், எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க உதவுகின்றன. அவை பொட்டாசியம், சோடியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்தவை" என்று அவர் கூறினார்.

உதாரணமாக தர்பூசணி, வெள்ளரி மற்றும் காய்கறிகள் ஆகியவை ஹீட் ஸ்ட்ரோக்கை தடுக்க உதவும். முலாம்பழம், கேரட், பருப்பு வகைகள் மற்றும் விதைகளை கோடை காலத்தில் உணவில் சேர்க்கலாம்.

Summer foods that will keep you hydrated

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: