படுத்தவுடன் உணவு வாய்க்கு வரும் பிரச்சனைக்கு, உணவியல் நிபுணர் தாரிணி சில முக்கிய குறிப்புகளை டாக்டர் விகடன் யூடியூப் பக்கத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ந்த நிலை அசிடிட்டி அல்லது ஜிஆர்டி (கேஸ்ட்ரிக் ஈசோபேகல் ரிஃப்ளக்ஸ் டிசீஸ்) என்று அழைக்கப்படுகிறது.
Advertisment
முதலில் படுத்தவுடன் உணவு வாய்க்கு வருவதற்கான காரணம் என்ன என்று அவர் கூறி இருக்கிறார்.
1. சீரணக் கோளாறு: சிலருக்கு உணவு சரியாக செரிமானம் ஆகாததாலும் இந்த பிரச்சனை வரலாம்.
2. காரமான/கனமான உணவுகள்: அதிக காரம், எண்ணெய், பஜ்ஜி, பர்கர், பிரியாணி போன்ற உணவுகள் செரிமானத்தை பாதித்து, ரிஃப்ளக்ஸை ஏற்படுத்தும்.
Advertisment
Advertisements
3. உண்டவுடன் படுத்தல்: உணவு உண்ட இரண்டு மணி நேரத்திற்குள் படுப்பது உணவு மேல் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
இதனை சரிசெய்வதற்கான வழிகள் என்ன என்று பார்ப்போம்.
1. வெள்ளை பூசணிக்காய் ஜூஸ்: அமாவாசைக்கு உடைக்கப்படும் வெள்ளை பூசணிக்காயின் சதைப்பகுதியை (தோல், விதை நீக்கி) பச்சையாக ஜூஸ் செய்து வெறும் வயிற்றில் 10-15 நாட்கள் குடிக்கலாம். இது அசிடிட்டியைக் குறைக்கும்.
2. உணவுக் கட்டுப்பாடு: காரமான, எண்ணெய் நிறைந்த, கனமான உணவுகளைத் தவிர்க்கவும். போர்ஷன் கண்ட்ரோல் செய்வது நல்லது.
3. சாப்பிட்டபின் நேரம்: இரவு 7 மணிக்கு உணவு உட்கொண்டால், 9 மணிக்கு மேல் படுக்கவும். சாப்பிட்ட உடனேயே படுப்பதைத் தவிர்க்கவும்.
4. தலைகாணி: படுக்கும்போது தலையணையை சற்று உயர்த்தி படுப்பதன் மூலம் உணவு மேல் வருவதைத் தடுக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.