ஆட்டுக்கால் பாயா என்பது தமிழ்நாட்டின் ஒரு புகழ்பெற்ற அசைவ உணவு. இது சூடான தோசை, இடியாப்பம், அல்லது அப்பத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்ற ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவு. இந்த ஆட்டுக்கால் பாயா எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த ஆட்டுக்கால் பாயா நடிகர் அதர்வாவுக்கு மிகவும் பிடிக்கும். இதை எப்படி செய்வது என்று இந்துகுக்கிங் டைம் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
ஆட்டுக்கால்
எண்ணெய்: 4 டேபிள்ஸ்பூன் கடலை எண்ணெய்
பிரியாணி மசாலா: (பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஸ்டார் அனிஸ்)
வெங்காயம்: 15 சின்ன வெங்காயம், 2 பெரிய வெங்காயம்
பச்சை மிளகாய்: 4
கறிவேப்பிலை: ஒரு கொத்து
தக்காளி: 2
இஞ்சி பூண்டு விழுது: 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள்: ½ டீஸ்பூன்
மிளகாய் தூள்: 1 டேபிள்ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள்: 2 டேபிள்ஸ்பூன்
உப்பு
தேங்காய்: ½ மூடி
சோம்பு: 1 டீஸ்பூன்
முந்திரி: 2 டேபிள்ஸ்பூன்
கசகசா: 1 டீஸ்பூன்
கொத்தமல்லி
செய்முறை:
குக்கரில் கடலை எண்ணெய் ஊற்றி, பிரியாணி மசாலாக்களைச் சேர்க்கவும். சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
சுத்தப்படுத்திய ஆட்டுக்கால்களைச் சேர்த்து நன்கு கிளறி, மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றவும். குக்கரை மூடி, 8 விசில் வரும் வரை வேக விடவும். ஒரு மிக்ஸர் ஜாரில் துருவிய தேங்காய், 2 பச்சை மிளகாய், சோம்பு, முந்திரி, கசகசா சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
ஆட்டுக்கால் நன்கு வெந்தவுடன், அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து, 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கினால், சுவையான ஆட்டுக்கால் பாயா தயார். இந்த ஆட்டுக்கால் பாயா நடிகர் அதர்வாவுக்கு மிகவும் பிடிக்கும். இதை அப்படியே நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.