நடிகை குஷ்புவுக்கு பிடித்த உருளைக்கிழங்கு சாதம். செய்வதும் ஈஸி லஞ்ச் பாக்ஸ்- க்கு நல்ல காம்பினேஷனாக இருக்கும் என்று அவர் கூறுகிறார். நடிகை குஷ்புவுக்கு பிடித்த ஈஸியான உருளைக்கிழங்கு சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
ஈஸியான உருளைக்கிழங்கு சாதம் நிரீதிஸ் லஞ்ச் பாக்ஸ் யூடியூப் பக்கத்தில் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
எண்ணெய்
கடுகு
சீரகம்
பூண்டு
வெங்காயம்
கருவேப்பிலை
உருளைக்கிழங்கு
உப்பு
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
கொத்தமல்லி தழை
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய், கடுகு, சீரகம் இடித்த பூண்டு, நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதில் உருளைக்கிழங்கு போட்டு உப்பு, மஞ்சள் தூள் போட்டு சிறிது நேரம் வேகவிடவும். ஆவியில் அது வெந்ததும் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மேலே சிறிது கொத்தமல்லி தழைகளையும் தூவி வடித்து வைத்த வெள்ளை சாதத்தை கொட்டி என்னை விட்டு கிளறவும்.
Kushboo's speech about Potato rice #food #potatorice #kushboo #shorts
அவ்வளவுதான் மேலே சிறிது கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் உருளைக்கிழங்கு சாதம் ரெடி ஆகிவிடும்.