சீரியல் மூலம் பிரபலமானவர்தான் நடிகை ரச்சிதா. இவர் சீரியலை தொடர்ந்து ஒரு சில படங்களிலும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
ஆரம்ப காலங்களில் இவருக்கு முகத்தில் நிறைய முகப்பருக்கள் இருந்தது. ஆனால் சில நாட்களுக்குப் பிறகு முகப்பருக்கள் மறைந்து பளபளப்பான முகத்தோற்றுடன் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தார்.
அதற்கு காரணம் என்னவென்று மிஸ் வாவ் தமிழா யூடியூப் பக்கத்தில் அவர் கூறி இருக்கிறார். அது குறித்து பார்ப்போம்.
அதாவது அழகிற்கும் முடிக்கும் என்னதான் நாம் நிறைய விஷயங்கள் செய்தாலும் உணவு மாற்றம் முக்கியம் என்று அவர் கூறுகிறார்.
அப்படியாக அவர் தினமும் காலையில் சத்துமாவு கஞ்சி மற்றும் இளநீர் மட்டுமே காலை உணவாக எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல மதியம் பிரவுன் ரைஸ் அல்லது இரண்டு சப்பாத்தி மற்றும் நிறைய காய்கறி வகைகளை எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். அப்படி காலையில் அவர் எடுத்துக் கொள்ளும் சத்துமாவு கஞ்சி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு, கம்பு,சோளம்,கோதுமை,
புழுங்கல் அரிசி,பார்லி, ஜவ்வரிசி
பச்சை பயறு
சோயா பீன்ஸ்
கொண்டைக்கடலை, கருப்பு சுண்டல்
மக்காச்சோளம்
வேர்க்கடலை, பொட்டுக்கடலை
முந்திரி, பாதாம், ஏலக்காய் (இதுபோன்ற நிறைய தனிய வகைகளை தேவைக்கு ஏற்ப கூட்டியும் குறைத்தும் சேர்க்கலாம்)
காலைல எந்திரிச்சதும் இந்த கஞ்சி குடிப்பேன்! - Rachitha Mahalakshmi's Food Routine | Fire Movie
செய்முறை:
முதலில் சத்து மாவிற்கு கொடுத்துள்ள பொருட்களில் கம்பு, கேழ்வரகு, சோளம், கோதுமை, பச்சை பயறு, வெள்ளை கொண்டைக்கடலை, கருப்பு சுண்டல், மக்கா சோளம் போன்றவற்றை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை நன்கு கழுவி, ஒரு துணியில் போட்டு மூட்டை கட்டி வைக்கவும்.
பின்னர் அதனை ஒரு நாள் முழுவதும் ஒவ்வொரு முறை அது காயும் போது, அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்துக் கொண்டே இருக்க வேண்டும். மறுநாள் அந்த மூட்டையைத் திறந்து பார்த்தால், முளைக்கட்டியிருக்கும். பின் அதனை வெளியே வெயிலில் போட்டு நன்கு உலர வைக்க வேண்டும். அத்துடன் மீதமுள்ள பொருட்களையும் உலர வைக்க வேண்டும்.
அடுத்ததாக காயவைத்த அனைத்து பொருட்களையும் நன்றாக பொன்னிறமாக வறுத்துக்கொண்டு அதனை மைய பொடி மாதிரி அரைத்து, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்து கொண்டால் தேவைப்படும் போது எல்லாம் பயன்படுத்தலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.