மதிய உணவுக்கு ஒரு சிறந்த குழம்பு நடிகை ராதிகா ஸ்டைலில் எப்படி செய்வது என்று பார்ப்போம். மோர் குழம்பு பல வழிகளில் பலர் சொல்லி வைத்து இருப்பீர்கள் ஆனால் நடிகை ராதிகா சஜஸ்ட் பண்ண மோர் குழம்பு சாப்பிட்டு இருக்கிறீர்களா? மிகவும் எளிமையாக சட்டென்று 5 நிமிடத்தில் இந்த மோர்க்குழம்பை செய்து விடலாம்.
தேவையான பொருட்கள்
தயிர்
மஞ்சள் தூள்
உப்பு
இஞ்சி
பச்சை மிளகாய்
கொத்தமல்லி
எண்ணெய்
கடுகு
சீரகம்
காய்ந்த மிளகாய்
கருவேப்பிலை
செய்முறை
தயிர், மஞ்சள் தூள், உப்பு மூன்றையும் கலந்து வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை மூன்றையும் கொரகொரப்பாக அரைகக்வும்.
மோர் குழம்பு # more kuzhambu # Vaani Rani special more kuzhambu
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்து வைத்துள்ளதையும் சேர்த்து வதக்கி பச்சை வாசனை நீங்கியதும் தயிர் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து ஒரு கொதிவிட்டு இறக்கி சுடு சாப்பாட்டுக்கு சாப்பிட்டால் மோர் குழம்பு அவ்வளவு ருசியாக இருக்கும்.
இதில் விருப்பப்பட்டால் வெண்டைக்காய் சேர்க்கலாம். சுவையாக இருக்கும். ராதிகா ஸ்டைலில் ஒருமுறை மோர் குழம்பு ட்ரை பண்ணி பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“