'ஃப்ரூட் ஜூஸை விட இது செம்ம எஃபக்டிவ்; பல வருஷமா சாப்பிடுறேன்': ஸ்ருதிகா அர்ஜுன்
பழச்சாறு குடிப்பதை விட காய்கறியில் இருந்து சாறு தயாரித்து குடிக்கலாம் என நடிகை ஸ்ருதிகா அர்ஜுன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நம் உடல் ஆரோக்கியம் மேம்படும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பழங்கள், காய்கறிகள் என இயற்கையாக கிடைக்கும் ஒவ்வொரு உணவு பொருட்களிலும் நம் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. குறிப்பாக, நாம் வசிக்கும் இடங்களுக்கு அருகே கிடைக்கக் கூடிய இயற்கையான உணவு பொருட்களின் நன்மைகள் ஏராளம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Advertisment
ஒவ்வொரு சீசனுக்கும் ஏற்றார் போல் உணவு முறைகளை மாற்றி அமைத்துக் கொள்வது நம் நோய் எதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தும். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதால், மக்கள் அனைவரும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகின்றனர்.
அந்த வகையில் வெயில் காலம் வந்தால் நிறைய பழங்கள் மற்றும் பழச்சாறுகள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், சர்க்கரை நோயாளிகளால் இந்த அளவிற்கு பழச்சாறு குடிக்க முடியாது. அவை, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை எளிதாக அதிகரித்து விடும்.
இது மட்டுமின்றி பழங்களில் ஃப்ரக்டோஸ் அதிகமாக இருப்பதால் அவற்றை குறைவான அளவு உட்கொண்டால் போதுமானது என சில மருத்துவர்களும் கூறுகின்றனர். இந்த சூழலில், காய்கறிகளில் இருந்து சாறு தயாரித்து பருகலாம் என நடிகை ஸ்ருதிகா அர்ஜுன் குறிப்பிடுகிறார். இவ்வாறு செய்யும் போது அவற்றில் இருந்து கிடைக்கும் சத்துகள் நம் உடலுக்கு நேரடியாக கிடைக்கின்றன.
Advertisment
Advertisements
அந்த வகையில், பழச்சாறு குடிப்பதை விட காய்கறியில் இருந்து சாறு எடுத்து குடிப்பது அதிக பலன் அளிக்கும் என நடிகை ஸ்ருதிகா அர்ஜுன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இதனை தான் தொடர்ந்து பின்பற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தக்காளி சாறு, பீட்ரூட் சாறு, கேரட் சாறு மற்றும் ஆப்பிள், பீட்ரூட், வெள்ளரிக்காய் சேர்த்து தயாரிக்கப்படும் சாறுகளை வாரத்திற்கு ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம் என ஸ்ருதிகா அர்ஜுன் பரிந்துரைக்கிறார். இவ்வாறு தொடர்ச்சியாக செய்யும் போது நம் உடலின் ஆரோக்கியம் மேம்படும் என்று கூறப்படுகிறது.
நன்றி - Shrutika Arjun Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.