நம்மில் பலரும் அன்றாட ருசிக்கும் உணவுகளில் ஒன்றாக தோசை இருக்கிறது. இவற்றை நம்முடைய வீடுகளில் எளிதில் செய்து விடலாம். வீட்டில் மாவு இல்லை என்றால் கூட, உடனே கடைக்கு சென்று தோசை மாவு வாங்கி சட்டென தயார் செய்து விடலாம்.
Advertisment
ஆனால், 'எப்போதும் இந்த அரிசி மாவு தோசை தானா' என நம்மில் பலர் அழுத்துப் போவது உண்டு. அதனால், அரிசி மாவில் புதுவிதமான உணவை தயார் செய்யும் வழிகளை தேடுவோம். அந்த வகையில், அனைவரும் பிடித்த அரிசி மற்றும் துவரும் பருப்பு மாவை கொண்டு புதுவிதமான அடை எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி - 1 டம்ளர் துவரம் பருப்பு - 1/4 டம்ளர்
சீரகம் - 1 ஸ்பூன் வர மிளகாய் - 3 கருவேப்பிலை - ஒரு கொத்து தேங்காய் - 1/4 மூடி சின்ன வெங்காயம் - 10
பெருங்காயத்தூள் - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு
நீங்கள் செய்ய வேண்டியவை:
முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் இட்லி அரிசி மற்றும் துவரம் பருப்பு சேர்த்து நன்கு அலசி ஊற வைத்துக் கொள்ளவும்.
இப்போது, ஒரு மிக்சி எடுத்து அதில், சீரகம், வர மிளகாய், கருவேப்பிலை சேர்த்து நொறுநொறுப்பாக அரைத்து தனியாக வைத்து கொள்ளவும்.
பிறகு, தேங்காயையும் அதேபோல் அரைத்து தனியாக வைத்து கொள்ளவும். பின்னர் சின்ன வெங்காயத்தையும் அதேபோல் அரைத்து தனியாக வைத்து கொள்ளவும்.
இப்போது, கிரைண்டரில் ஊற வைத்த இட்லி அரிசி மற்றும் துவரம் பருப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும். பிறகு அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பின்பு பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்க்கவும்.
கடைசியாக, தேங்காய் மற்றும் சின்ன வெங்காயத்தை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும். இவற்றை கெட்டியாகவும் நொறுநொறுப்பாகவும் அரைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
பின்னர், அவற்றை வடை போல் ஒரு ஈர துணியில் வைத்து தட்டி, ஏற்கனவே கொதிக்க வைத்திருக்கும் எண்ணெயில் போட்டு எடுக்கவும். இப்போது நீங்கள் எதிர்பார்த்த அடை தயாராக இருக்கும். இவற்றை தேங்காய் சட்னியுடன் சேர்த்து ருசித்து மகிழலாம்.