ஒசூர் அருகே பழக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் தரமின்றி விற்பனை செய்யப்பட்ட 8 டன் தர்பூசணி பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டையில் பழங்கள் விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு நடத்தினர்.
அப்போது, தர்பூசணி பழங்களில் ரசாயன நிறமூட்டிகளை கலந்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த கடைகளில் இருந்து சுமார் 8 டன் அளவில் தர்பூசணி பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதுமாதிரியான தார்பூசணிகளை மக்கள் சாப்பிடுவது பல்விதமான பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும் என்றும் சுவை மாறிவிடும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.