Advertisment

பாட்டி சொன்ன ரகசியம்... மிளகாய் தூள் அரைக்கும் போது இதை மறக்காதீங்க; குழம்பு செம ருசியா இருக்கும்!

மிளகாய் தூள் அரைக்கும்போது இந்த ஒரு பொருளை சேர்த்தால் போதும் குழம்பு ருசியா இருக்கும். எப்படி செய்வது என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
adulteration in food tips: how to find adulteration in chilli powder video

மிளகாய் தூளுடன் இந்த ஒரு பொருள் போதும் குழம்பு சுவை கூட்ட

தேவையான பொருட்கள்

Advertisment

கருவேப்பிலை -150 கிராம்
கொத்தமல்லி -ஒரு கிலோ
காய்ந்த மிளகாய் -ஒரு கிலோ
மஞ்சள் -100 கிராம் 
வெந்தயம் -50 கிராம் 
கடலைப்பருப்பு -100 கிராம்
மிளகு -100 கிராம் 
சீரகம் -100 கிராம்
கடுகு உளுத்தம் பருப்பு -100 கிராம்
துவரம்பருப்பு -100 கிராம் 
சுக்கு சிறிதளவு 

செய்முறை

மேற்குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தையும் தனித்தனியாக மிதமான சூட்டில் நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் வறுத்து எடுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து ஆற வைக்கவும்.  இதனை நன்கு மைய தூள் பதத்திற்கு மெஷினில் கொடுத்து அரைத்து எடுத்து வந்து வீட்டில் ஆறவைத்து காற்று புகாத ஒரு பாத்திரத்தில் அடைத்து வைக்கலாம்.

மேலும் இந்த மிளகாய் தூள் பொடி போட்டு வைக்கப்படும் டப்பாவில் பிரியாணி இலை போட்டு வைத்தால் பூச்சி விழும் தொல்லை இருக்காது.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Healthy Cooking Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment