/indian-express-tamil/media/media_files/MuNE5MOm23cWHZBzlcf7.jpg)
தர்பூசணியுடன் இதை சேர்த்து சாப்பிடலாம்: எடைக் குறைப்பிற்கு ஏற்ற பானம்!
தர்பூசணிகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமான தண்ணீர் உள்ளது என்றும் வைட்டமின் சி, ஏ, பி6 மற்றும் பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், ஃபோலேட் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன என்றும் ஹோலிஸ்டிக் சுகாதார பயிற்சியாளர் இஷாலால் பகிர்ந்து கொண்டார். தர்பூசணிகள் அதிகப்படியான தாகம் மற்றும் சோர்வைப் போக்கவும், உடலில் ஏற்படும் அசௌகர்ய உணர்வைப் போக்கவும், எரிச்சல்மிகுந்த சிறுநீர் கழிப்பதைப் போக்கவும், சிறுநீர்ப்பை தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் தர்பூசணி உதவுகின்றன. இது வீக்கம் மற்றும் வீக்கத்தையும் நீக்குகிறது என்கிறார் இஷாலால்.
கோண்ட் கதிரா: 'கோண்ட் கதிரா' என்பது asparagus செடியிலிருந்து எடுக்கப்படும் இயற்கை பிசின். மஞ்சள் நிறத்தில் இருக்கும் நீரில் ஊறப்போட்டால் ஜெல்லி போன்று ஆகும். இதில் குளிர்ச்சி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் பானங்களில் சேர்க்கப்படுகிறது. செரிமானம் மெடபாலிசம் சீராக்கி மற்றும் உடலை இது நீரேற்றமாக வைக்கிறது. செரிமானத்திற்கு உதவும் மற்றும் மலச்சிக்கலைப் போக்க உதவும். மென்மையான குடல் அனுபவத்தையும் எடை குறைப்பையும் செய்யும்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: Add this ingredient in your watermelon drink
ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் மருத்துவர் மற்றும் நீரிழிவு நிபுணர் சோம்நாத் குப்தா, இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கோண்ட் கதிராவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை உட்புற வீக்கத்தை குறைக்க உதவும் என்று கூறினார். சரும நீரேற்றம் மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்த பங்களித்து, நிறத்தை மேம்படுத்தும் என்று அவர் கூறினார்.தர்பூசணி மற்றும் கோண்ட் கதிராவின் மிக்ஸ் இயற்கையான ஆற்றலை அளிக்கிறது. வெப்ப நாட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது என்றார்.
இருப்பினும், எவ்வளவு கோண்ட் கதிராவை சேர்க்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று குப்தா எச்சரித்தார். “கோண்ட் கதிராவை அதிகமாக உட்கொள்வது, அதன் அதிக நார்ச்சத்து காரணமாக, வீக்கம் (அ) வயிற்றுப்போக்கு ஏற்படும் என்றும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தக் கூடும் என்றும் குப்தா கூறினார். கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கோண்ட் கதிராவை சாப்பிடும் முன்பு தங்கள் சுகாதார நிபுணர்களை அணுக வேண்டும் என்று அவர் கூறினார்.
காலை 10 முதல் மதியம் 12 மணி வரை காலை உணவுக்கும் மதிய உணவிற்கும் இடையில் இதை சாப்பிடலாம் என்று லால் பரிந்துரைத்தார். மாலை 5 மணிக்கு முன்பு மாலை சிற்றுண்டியாகவும் இதை நீங்கள் சாப்பிடலாம். ஆனால் இரவில் (அ) உங்கள் உணவுடன் இதை உட்கொள்ள வேண்டாம் என்று அவர் எச்சரித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.