அ.தி.மு.கவில் அவசர செயற்குழுக் கூட்டம் ஆக.16ம் தேதி நடைபெறும் என அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் இ.பி.எஸ் வெளியிட்ட அறிக்கையில், அ.தி.மு.கவினர் அவசர செயற்குழு கூட்டம் வரும் ஆக.16 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு, சென்னை , ராயப்பேட்டை , அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில், அவைத் தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும்.
அ.தி.மு.க செயற்குழு உறுப்பினர்களான தலைமைச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், பிற மாநிலச் செயலாளர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் , தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஆக.9ம் தேதி நடைபெறவிருந்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக முன்னதாக அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது இந்த புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.