குழந்தை பெற்று 10 நாட்களில் இருந்து 40 நாட்கள் வரை இந்த குழம்பு சாப்பிடலாம் சுவையாக இருக்கும் தாய்ப்பாலும் சுரக்கும்.
தேவையான பொருட்கள்:
சதகுப்பை
கண்டந்திப்பிலி
சுக்கு
மிளகு
கொத்தமல்லி
சீரகம்
காய்ந்த மிளகாய்
புளி
பூண்டு
சின்ன வெங்காயம்
தக்காளி
கல் உப்பு
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
பெருங்காயம்
நல்லெண்ணெய்
மல்லி தூள்
வெந்தயம்
தேங்காய்
செய்முறை
சதகுப்பை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். கண்டந்திப்பிலி, சுக்கு, மல்லி விதை, காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம் இவை அனைத்தையும் எடுத்து வைக்கவும்.
பின்னர் தேவையான அளவு புளி, நாட்டு பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி இவை அனைத்தையும் எடுத்து முதலில் வைத்துக் கொள்ளவும். மசாலாக்கள் அனைத்தும் ஒரு ஸ்பூன் இரண்டு ஸ்பூன் குழம்பு வைப்பதற்கு தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்.
1/2 கிலோ பூண்டு, அரை கிலோ சின்ன வெங்காயம், ஒரு நான்கு தக்காளி இந்த அளவில் எடுத்துக் கொள்ளவும். நீங்கள் எந்த அளவு தேவையோ அந்த அளவில் எடுத்துக் கொள்ளலாம்.
பின்னர் ஒரு கடாயில் மசாலாக்களை வருத்து இவற்றை மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி வெந்தயம், கட்டிப் பெருங்காயம் சேர்க்கவும்.
பின்னர் இதில் சின்ன வெங்காயம், பூண்டு, கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். கல் உப்பு சேர்த்து வதக்கினால் நன்றாக வதங்கும்.
பேறுகால மருந்து குழம்பு தாய்பால் அதிகரிக்க இப்படி செய்ங்க | Marunthu Kulambu |Pathiya kulambu recipe
பின்னர் இதில் தக்காளியை சேர்த்து அரைத்து வைத்துள்ள மசாலாக்கள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் ஒவ்வொரு டீஸ்பூன் சேர்த்து விடவும். பின்னர் இதில் புளி கரைசலை சேர்த்து உப்பு சரி பார்த்து கொதிக்க விடவும்.
ஒரு இரண்டு டீஸ்பூன் தேங்காய் அரைத்து ஊற்றி கொதிக்க விடவும் எண்ணெய் பிரிந்து வரும்போது இந்த குழம்பை இறக்கி மேலே சிறிது நல்லெண்ணெய் விட்டு சாப்பிடலாம்.
குழந்தை பெற்றவர்கள் காரம், உப்பு மற்றும் தக்காளி குறைவாக சேர்த்து சாப்பிடலாம்.
இந்த தகவல்கள் சுடர் கருணை பிரகாசம் யூடியூப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது.