இரும்புச் சத்து ஏராளம்... நம்ம பராம்பரிய குழம்பை மிஸ் பண்ணிடாதீங்க!

அகத்தில் உள்ள நோய்களை தீர்க்கக்கூடிய ஆற்றல் இதில் இருப்பதால், இதற்கு அகத்தி கீரை என்ற பெயர் வந்தாக கூறப்படுகிறது. இதை வைத்து ஒரு அருமையான பருப்பு கூட்டு எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.

அகத்தில் உள்ள நோய்களை தீர்க்கக்கூடிய ஆற்றல் இதில் இருப்பதால், இதற்கு அகத்தி கீரை என்ற பெயர் வந்தாக கூறப்படுகிறது. இதை வைத்து ஒரு அருமையான பருப்பு கூட்டு எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.

author-image
WebDesk
New Update
Screenshot 2025-09-07 143959

வருடம் முழுவதும் சுலபமாக கிடைக்கக்கூடியது. மேலும் வெற்றிலைத் தோட்டத்திற்கு உறுதுணையாகவும், பொதுவாக வெற்றிலைத் தோட்டம் உள்ள பகுதியில் இந்த அகத்திக்கீரை ஏராளமாக கிடைக்கும். முற்றின கீரையை சமையலுக்கு பயன்படுத்தக்கூடாது, அவை ஒவ்வொமை மற்றும் வயிற்று பிரச்சனையை ஏற்படுத்திவிடும், இளங்கீரையை எடுத்து சமையலுக்கு பயன்படுத்தவேண்டும்.

Advertisment

இதில் 50 கும் மேற்பட்ட சத்துகள் உள்ளது. இரண்டு வகையான அகத்தி கீரை, ஒன்று வெள்ளை நிற பூக்கள் கொண்டது, மற்றொன்று சிவப்பு நிற பூக்கள் கொண்டது. இந்த மரத்தின் அனைத்து பகுதிகளும் மூலிகை தன்மை உள்ளது. பெரும்பாலும் வெள்ளை நிற பூக்கள் கொண்ட அகத்தி கீரையை அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. இக்கீரை சற்று கசப்பாக இருக்குமென்பதால், மற்ற கீரையை போல் விலை போவதில்லை. இந்த கசப்பு தன்மை தெரியாமல் இருக்க சமைக்கும்போது, தேங்காப்பால் சேர்த்து சமைத்தால், ருசியாக இருக்கும்.

ஆனால் இதில் உள்ள மருத்துவ குணங்களும், உயிர்ச்சத்துக்களும் பற்றி தெரிந்துகொண்டால், உடலின் பல்வேறு ஆரோக்கியத்திற்கு பெரும் பங்கு இதற்கு உண்டு. புகை பிடிக்கும் பழக்கம், மது அருந்துதல், குட்கா, புகையிலை போன்ற பழக்கத்தில் உள்ளவர்கள், அடிக்கடி உணவில் சேர்த்துவர, இப்பழக்கத்திலிருந்து விடுபடலாம். இக்கீரையில் வாயு தன்மை இருப்பதால், சமைக்கும்போது பெருங்காயம் சேர்த்து கொள்வது, முற்றிலும் வாயுவை வெளியேற்றிவிடும்.

கால்சியம் சத்தும் அதிகம் இருப்பதால் முக்கியமாக பற்கள், மற்றும் எலும்புகளுக்கு மிகவும் நல்லது. இக்கீரையை சமைத்து உண்டபின், செரிமானம் மெதுவாக இருக்கும், எனவே குழந்தைகள், பெரியவர்கள் மத்திய உணவில் மட்டும் சேர்த்துக்கொள்வது நல்லது. வாரத்தில் 2 முறை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால், முதிர்வயதிலும் எலும்பு உறுதியாக இருக்கும்.

Advertisment
Advertisements

தேமல், மற்றும் சொரியாசிஸ் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு இக்கீரையை மைய அரைத்து, தேமல், சொரியாசிஸ் உள்ள இடத்தில் தடவி வந்தால், கொஞ்சம் கொஞ்சமாக குணமடைய வாய்ப்புண்டு. பித்தம், உடல் சூடு, மூளை சம்பந்தமான பகுதியில் கோளாறு ஏற்படுவதால், அறிவு ஆற்றல் மற்றும் நியாபக குறைவு ஏற்படும். இவற்றை சரிசெய்ய அடிக்கடி உணவில் சாப்பிட்டுவந்தால், இப்பிரச்சனையிலிருந்து பூரண குணமடையலாம். அகத்தி கீரையின் பூக்களை கண்களில் வைத்து சிறு துணி வைத்து கட்டிக்கொண்டால், கண் சம்பந்தமான கோளாறுகள் நீங்கி, நல்ல தெளிவான பார்வை கிடைக்கும்.

இதை வைத்து ஒரு அருமையான பருப்பு கூட்டு செய்யலாம் வாங்க. 

தேவையான பொருட்கள்

அகத்திக்கீரை - 1 கட்டு
துவரம் பருப்பு அல்லது பாசிப்பருப்பு - 1/2 கப்
வெங்காயம் - 1 (சிறியது)
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 2-3 (தாளிக்க)
பூண்டு - 3-4 பற்கள்
கடுகு, உளுந்து, வெந்தயம் - தாளிக்க தேவையான அளவு
கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் - தாளிக்க தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

துவரம் பருப்பு அல்லது பாசிப்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் நன்றாக வேக வைத்து மசித்துக் கொள்ள வேண்டும். அதேபோல் அகத்திக்கீரையை நன்றாகக் கழுவி, நறுக்கி வேக வைத்துக் கொள்ளவும். தாளிப்பிற்காக சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, வெந்தயம் போட்டு தாளிக்க வேண்டும்.

அதன்பின் கறிவேப்பிலை, பூண்டு, காய்ந்த மிளகாய் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி, பின்னர் தக்காளி சேர்த்து அது மசியும் வரை வதக்க வேண்டும். இதனுடன் மசித்து வைத்த அகத்திக்கீரையை சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

குழம்பாகத் தேவையெனில் புளி கரைசலைச் சேர்த்து ஒரு கொதி விட வேண்டும். இறுதியாக பருப்பைச் சேர்த்து நன்றாகக் கிளறி, மசித்துக் கொண்டால் சுவையான அகத்திக்கீரை கூட்டு தயார்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: