scorecardresearch

காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்பு… இதில் இவ்வளவு நன்மை இருக்கு!

பாரம்பரியமாக ஓமம் வயிறு உப்புதலையும், அஜீரணத்தையும் குணப்படுத்துகிறது.

காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்பு… இதில் இவ்வளவு நன்மை இருக்கு!

ஓமத்திற்கு அதிக நன்மைகள் இருக்கிறது. பாரம்பரியமாக ஓமம் வயிறு உப்புதலையும், அஜீரணத்தையும் குணப்படுத்துகிறது. இதிலிருந்து எடுக்கப்படும் தைமோல் எண்ணெய் ஜீரணத்தை ஊக்கப்படுத்துகிறது.

இது உணவு செரிமாணமாக உதவுவதோடு, உணவை உடல் எடுத்துகொள்ளவும் உதவுகிறது. மேலும் உடலில் கொழுப்பு குறைய உதவுகிறது.

தினமும் காலை நீங்கள் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு ஓமம் விதைகளை வாயில் போட்டு மென்றால், உடலுக்கு நன்மை உண்டாகும். உங்களுக்கு நேரடியாக சாப்பிடுவது பிடிக்கவில்லை என்றால், தண்ணீரில் ஓமம் போட்டு குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது.

உடல் எடையை குறைக்க வேண்டும் நீங்கள் நினைத்தால், 2 ஸ்பூன் ஓமத்தை இரவில் தண்ணீரில் போட்டுவிடுங்கள். இந்த தண்ணீரை காலையில் வடிகட்டி சுட வைத்து குடியுங்கள். நாள் முழுவதும் இந்த தண்ணீரை குடித்து வர, உடல் எடை குறையும் .

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Ajwain water for weight loss