கத்திரிக்காய் பிடிக்கும் என்பவர்கள் நிச்சயம் இந்த ஒன் பாட் வாங்கிக் குளியல் ரெசிபியை முயற்சி செய்ய வேண்டும். இதன் சுவை வேற லெவலில் இருக்கும். இதை எப்படி செய்வது என்று மைசெல்ஃப்டைம் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு - கால் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - கால் ஸ்பூன்
வெள்ளை எள் - ஒரு ஸ்பூன்
காஞ்ச மிளகாய் - 5
தேங்காய் - சிறிது
தனியாதூள் - அரை ஸ்பூன்
வெறுமிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்
எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்
பட்டை வகைகள் - (பட்டை, கிராம்பு, ஏலக்காய்)
வேர்கடலை - ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
கருவேப்பிலை - 2 கொத்து
காஞ்ச மிளகாய் - 2
வெங்காயம் (மீடியம் சைஸ்) - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - கால் ஸ்பூன்
தக்காளி (மீடியம் சைஸ்) - 1
கத்திரிக்காய் (பெரிய சைஸ்) - 2
கல்ல உப்பு - ஒன்றரை ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
அரிசி - ஒரு கிளாஸ்
தண்ணீர் - இரண்டு கிளாஸ்
நெய் - ஒரு ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் கால் ஸ்பூன் கடலைப்பருப்பு, கால் ஸ்பூன் உளுத்தம்பருப்பு, ஒரு ஸ்பூன் வெள்ளை எள் சேர்த்து வறுக்கவும். எள் நன்கு பொரிந்ததும், ஐந்து காய்ந்த மிளகாய் மற்றும் சிறிதளவு தேங்காய் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். வறுத்த கலவையை மிக்ஸி ஜாருக்கு மாற்றி, அரை ஸ்பூன் தனியாதூள், ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து அரைத்து தனியே வைக்கவும்.
இப்போது, குக்கரில் ஐந்து டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பட்டை வகைகள், ஒரு டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை, அரை ஸ்பூன் சீரகம், இரண்டு கொத்து கருவேப்பிலை, இரண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர், ஒரு மீடியம் சைஸ் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் இரண்டு பச்சை மிளகாய், கால் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, ஒரு மீடியம் சைஸ் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
இரண்டு பெரிய கத்திரிக்காய்களை வெட்டி சேர்த்து, அதையும் நன்கு கலக்கவும். கத்திரிக்காய் சேர்த்த பிறகு அதிக நேரம் வதக்கத் தேவையில்லை. ஒன்றரை ஸ்பூன் கல் உப்பு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, நாம் அரைத்து வைத்திருந்த மசாலாவை சேர்த்து நன்கு கலக்கவும்.
ஒரு கிளாஸ் அரிசிக்கு இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்றி, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து, நன்கு கொதி வந்ததும் அரிசியை சேர்க்கவும். குக்கரை மூடி, இரண்டு விசில் வந்ததும், கடைசி விசில் லோ பிளேமில் வைத்து எடுக்கவும். பிரஷர் முழுவதுமாக குறைந்ததும், குக்கரை திறந்து நன்கு கிளறினால், சுவையான கத்தரிக்காய் சாதம் தயார்! இதன் சுவை அருமையாக இருக்கும், எனவே கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள்.