ஹைபர் சென்சிடிவ்வாக இருப்பவர்களுக்கும் சைனஸ் பிரச்னை வரக் கூடிய வாய்ப்பு உள்ளது. சைனஸ் மூக்கின் பக்கத்தில் இருப்பதால், மூக்கு வழியே அந்த காற்று பைகளில் வைரஸ், பாக்டீரியா தொற்று, தூசி நுழைந்து அலர்ஜி ஏற்படுத்தி சளி, மூக்கு உரிதல், மூக்கில் நீர்வடிந்து கொண்டே இருத்தல், தும்மல், இருமல், ஜலதோஷம் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும்.
சைனஸ் பிரச்சனை முன்பு அலர்ஜி இருப்பவர்களுக்கு மட்டும் இருந்தது. இப்போது சுற்றுச்சூழல் மாசு காரணமாக சைனஸ் பிரச்னை பலருக்கும் வருகிறது. சைனஸ் பிரச்னை மரபாக வரக் கூடிய வாய்ப்பு உள்ளது. தாத்தா, தந்தைக்கு இருந்தால் அது அவர்களது குழந்தைகளுக்கும் வர வாய்ப்பு உள்ளது.
வீட்டில் உள்ள தூசி, சமையல் செய்யும் போது வரும் வாசனையின் போது சிலருக்கு தும்மல் வரும். தொடர்ந்து தும்மல் வருபவர்களுக்கும் இந்த வாய்ப்பு உள்ளது. மனதளவில் அமைதியாகவும், பதற்றம் இல்லாதவர்களுக்கு இந்த சைனஸ் பிரச்னை வாய்ப்பு குறைவு என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அந்தவகையில் சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க மற்றும் சேர்க்க கூடிய உணவுகள் பற்றி மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
1.அலர்ஜி உள்ளவர்கள் பால் பொருட்களை தவிர்க்க வேண்டும்.
2. இனிப்பு வகைகளை குறைக்க வேண்டும். வெள்ளச் சர்க்கரை கட்டாயம் கூடாது.
3. நீர்க்காய்கறிகளான சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத நேரத்தில் அதில் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடலாம்.
மூக்கடைப்பு, தும்மல், தலைவலி குணமாக | Allergic sinusitis,nose block, headache treatment Dr.Sivaraman
சேர்க்க கூடிய உணவுகள் மற்றும் செய்யக்கூடிய செயல்கள்
- எல்லா வகையான உணவுகளிலும் மிளகு சேர்க்கலாம்.
- சீரக தண்ணீர் குடிக்கலாம்.
- கொத்தமல்லி, புதினா அவசியம் சாப்பிட வேண்டும்.
- உணவு தாளிக்கும்போது சீரகம் சேர்ப்பது அவசியம்
- சிட்ரஸ் பழங்களை தவிர்த்து விட்டு மற்ற பழங்களை அதிகம் சாப்பிடலாம்.
- இளம் மோர் குடிக்கலாம்
- மூலிகை பொடிகள், தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“