கொலஸ்ட்ராலை கட்டுபடுத்த பாதாம் உதவு செய்யும் எனக் கூறப்படுகிறது. இதை ஒரு சூப்பர் உணவு என்று கூட அழைக்கலாம். இதில் முக்கியமான நார்சத்து, வைட்டமின் இ உள்ளது.
இதில் இருக்கும் கொழுப்பு சத்து கூட நன்மையே உண்டாக்குகிறது. உடல் எடை குறையவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும் உதவுகிறது. மேலும் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது.
இதில் புரத சத்து, சிங்க், மெக்னிஷியம், பொட்டாஷியம், ஆன்டி ஆக்ஸிடன்ட் இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில், தினமும் பாதாம் சாப்பிட்டால், கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்காமல் தடுக்கும்.

இதுபோல தினமும் 14 கிராம் பாதாம் சாப்பிட்டால், இதயத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதனால் காலையில் , ஊரவைத்த பாதாமை தோல் நீக்கி சாப்பிடலாம்.
வறுத்த பாதாம்
ஒரு பாத்திரத்தில் சிறிய அளவு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி பாதாமை வறுத்து சாப்பிடலாம்.

பாதாம் சட்னி
10 பாதாமை எடுத்துக்கொள்ளுங்கள். அத்துடன் வெங்காய தழை, புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் பூண்டு, கடுகு ஆகியவற்றை தாலித்து அரைத்த கலைவையில் கொட்ட வேண்டும்.