தினமும் கொஞ்சம் பாதாம், வாழைப்பழ துண்டுகள் : நீங்கள் எதிர்பார்க்காத பலன்கள் கிடைக்கும்

நம்மில் சிலருக்கு பாதாம் சாப்பிடும் பழக்கம் இருக்கும். பச்சையாக அல்லது ஊற வைத்து நாம் எடுத்துக்கொள்வோம். இந்நிலையில் தினமும் பாதாம் சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் இருக்கிறது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
கொஞ்சம் பாதாம், சில வாழைப்பழ துண்டுகள்

கொஞ்சம் பாதாம், சில வாழைப்பழ துண்டுகள்

நம்மில் சிலருக்கு பாதாம் சாப்பிடும் பழக்கம் இருக்கும். பச்சையாக அல்லது ஊற வைத்து நாம் எடுத்துக்கொள்வோம். இந்நிலையில் தினமும் பாதாம் சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் இருக்கிறது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

வைட்டமின் இ, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், ரிபோபிளாவின், மான்கனீஸ், மெக்னீஷியம், காப்பர், இரும்பு சத்து, சிங் ஆகியவை உள்ளது. கூடுதலாக புரத சத்து மற்றும் கரையக்கூடிய நார்சத்து இருக்கிறது. இந்நிலையில் இதில் இருக்கும் வைட்டமின் இ, எல்.டி.எல் கொலஸ்ட்ரால் உடலை பாதிக்காமல் இருக்க உதவுகிறது.

இதில் இருக்கும் மெக்னிசியம் சத்து, ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதில் இருக்கும் அமினோ ஆசிட்-ஆக ட்ரைப்டோபேன் உள்ளது. இத்துடன் வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி6 சேரும்போது, மன அழுத்ததில் இருப்பார்களுக்கு  உதவியாக இருக்கும். வைட்டமின் பி6 ட்ரைப்டோபேன் என்ற அமினோ ஆசிடை, செரொடோனின் ஆக மாற்றுகிறது. இந்த செரடோனின் மன அழுத்தத்தின் தன்மையை குறைக்கிறது.

உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், குறந்த அளவில் கார்போஹைட்ரேட் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்நிலையில் உடல் எடை குறைக்கும் நபர்களுக்கு அடிக்கடி பசி எடுக்கும். இந்நிலையில் பாதாம் சாப்பிட்டால், தொடர்ந்து பசி எடுக்காது.

Advertisment
Advertisements

தினமும் பாதாம் சாப்பிட்டால், ரத்த சர்க்கரை அளவு மற்றும் இன்சுலின் சீராக இருக்கும். ரத்த சர்க்கரை மிகவும் குறைந்து தலை சுற்றல் வந்தால், பாதாம் சாப்பிடலாம்.

குடலுக்கு தேவையான பேக்ட்ரீயா அளவை இது சரி செய்கிறது. பைஃபிடோ பாக்டீடிரியா  (Bifidobacteria) , யுபாக்டிரியம் ரெக்டேல்  (Eubacterium rectale) ஆகியவற்றின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. குடலில் இருக்கும் பாக்டீரியாவுக்கு உணவாக இது இருக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: