அலோவேராவில், ஆண்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. இதில் இருக்கும் வீக்கத்திற்கு எதிரான பண்புகள், இதை நாம் முகத்திலும் போடலாம் அதே நேரத்தில் உணவாகவும் சாப்பிடலாம்.
இந்நிலையில் கற்றாழையை நாம் சாப்பிட்டால், அஜீரணக் கோளாறு ஏற்படாது. கற்றாழையில் வயிற்றை சுத்திகரிக்கும் தன்மை உள்ளதால், ஜீரணிக்க இது உதவும். மேலும் குடலில் உள்ள பேக்ட்டிரியா அளவை சீராக வைத்திருக்கும். இந்நிலையில் குடலில் நல்ல பேக்ட்டிரியா அளவை அதிகரிக்கிறது.
சில ஆய்வுகள், கற்றாழை சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வைத்திருக்கும் என்று கூறுகிறது. இந்நிலையில் இது இன்சுலின் உடல் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதை தடுக்கிறது. மேலும் இதனால் கற்றாழை சாப்பிடுவதால், சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக உடல் எடை குறைய உதவுகிறது. கற்றாழையில் உள்ள ஜெல், உடலில் உள்ள நச்சுக்களை போக்குகிறது. மேலும் இதில் வீக்கத்திற்கு எதிரான பண்புகள் இருப்பதால், உடல் எடை குறையவும் உதவுகிறது.
இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் கற்றாழையை எப்படி சாப்பிட முடியும் என்று கேள்வி நம்மிடம் எழும். இந்நிலையில் எப்படியெல்லாம் சாப்பிட முடியும் என்பதை தெரிந்துகொள்வோம்.
கற்றாழையை துண்டுகளாக வெட்டி, அதில் இருக்கும் மஞ்சள் நிற திரவம் வடியும் வரை காத்திருக்கவும். தொடர்ந்து அதன் ஜெல்லை மட்டும் எடுத்துக்கொண்டு, இளநீருடன் சேர்த்து மிக்ஸியில் அடித்து கொள்ளுங்கள். தொடர்ந்து அதில் தேன் வேண்டும் என்றால் சேர்த்து சாப்பிடலாம்.
இதுபோல காய்கறி சாலடில் , ஜெல்லை மற்றும் சேர்த்துகொள்ளலாம். இந்நிலையில் நாம் கற்றாழை ஜெல்லை, ஐஸ் ட்ரேவில் ஊற்றி அதை ப்ரீசரில் வைக்க வேண்டும். இதை நாம் ஸ்மூத்தி செய்யும்போது, அதில் சேர்த்துகொள்ளலாம் .
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil