scorecardresearch

காலையில் 2 ஸ்பூன் கற்றாழை ஜூஸ்; 2 ஸ்பூன் தண்ணீர்… இதில் எவ்வளவு நன்மைன்னு பாருங்க!

இந்நிலையில் மலச்சிக்கலை தவிர்க்க சில வழிகள் இருக்கிறது. இதில் கற்றாழை சாறு நல்ல பலன் அளிப்பதாக கூறப்படுகிறது.

காலையில் 2 ஸ்பூன் கற்றாழை ஜூஸ்; 2 ஸ்பூன் தண்ணீர்… இதில் எவ்வளவு நன்மைன்னு பாருங்க!

நம்மில் பலருக்கு மலச்சிக்கல் ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. நம்மில் பலர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு பரோட்டா, பீட்சா  சாப்பிடுவதாக  நமது வாழ்க்கை முறை மாறியிருக்கிறது. மேலும் நாம் போதிய நார்சத்தை எடுத்துகொள்ளவில்லை. நமது வயிற்றில் இருக்கும் நுண்ணுயிரிகளுக்கு நார்சத்து முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

கற்றாழை ஜூஸ்

இந்நிலையில் மலச்சிக்கலை தவிர்க்க சில வழிகள் இருக்கிறது. இதில் கற்றாழை சாறு நல்ல பலன் அளிப்பதாக கூறப்படுகிறது. எப்படி நமது கூந்தல், தோல் ஆகியவைக்கு கற்றாழை ஜூஸ் உதவுகிறதோ. அதுபோலவே மலச்சிக்கலை கட்டுப்படுத்துகிறது.

இந்நிலையில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜீஸ், 2 டேபிள் ஸ்பூன் தண்ணீருடன் சேர்த்து சாப்பிட வேண்டும். அதுவும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் உணவில் சேர்த்துக்கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படாது என்று ஆய்வுகள் கூறுகிறது.

சியா விதைகள்

இதில் இருக்கும் அதிக நார்சத்து, மலச்சிக்கலை குறைக்க உதவுகிறது. இதுபோலவே விளக்கெண்ணையும்  மலச்சிக்கலை வயதானவர்களிடம் கட்டுப்படுத்த உதவுகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Aloe vera juice for constipation and more