கற்றாழை மனித உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் சக்தியைக் கொண்டிருக்கிறது. 75 விதமான புரதச்சத்துக்கள், வைட்டமின் பி மற்றும் சி சத்துக்களும் தாது உப்புகளும் கற்றாழையில் நிறைந்திருக்கின்றன.
Advertisment
உடல் சோர்வு, உடல் உஷ்ணம், மலச்சிக்கல், சிறுநீர் பிரச்சினைகள், பசியின்மை, அல்சர் மற்றும் பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் முதலான சிக்கல்களுக்கு கற்றாழைச்சாறு சிறந்த நிவாரணியாக பயன்படுத்தப்படுகிறது.
கற்றாழையின் நுங்கு போன்ற பகுதியை ஓடும் தண்ணீரில் நன்றாக அலசி கசப்பு நீங்கியதும் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு கருப்பை பலமடையும். மாத விடாய் பிரச்சினைகள் நீங்கும். நீர்க்கடுப்பு, நீர்ச்சுளுக்கு, எரிச்சல், அரிப்பு போன்றவையில் இருந்தும் விடுபடலாம்.
கற்றாழை ஜூஸ் எப்படி செய்வது?
செடியில் இருந்து புதிய கற்றாழையை வெட்டி தோலுரித்து, உள்ளே இருக்கும் ஜெல்லை எடுத்து தண்ணீரில் நன்கு கழுவவும்.அதை பிளெண்டரில் சேர்த்து நன்கு அரைக்கவும். ஒரு கிளாஸில் ஜூஸ் ஊற்றி, ஒரு துளி எலுமிச்சை சேர்க்கவும்.
வெறும் வயிற்றில் குடிக்கவும்.
நீங்கள் முயற்சி செய்ய விரும்புகிறீர்களா?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“