scorecardresearch

காளிபிளவர், மோர் கொஞ்சம் இந்த உணவுகள் : உடல் எடை குறைக்க சரியான உணவுகள் இதுவே

இதுபோல பாதாம், வால்நட், சியா விதைகள், பிளக்ஸ் விதைகளில் கூட நார்சத்து மற்றும் புரத சத்து உள்ளது.

காளிபிளவர், மோர் கொஞ்சம் இந்த உணவுகள்
காளிபிளவர், மோர் கொஞ்சம் இந்த உணவுகள்

உடல் எடை குறைப்பது என்பது உடனே பலன் தரும் விஷயம் அல்ல. குறிப்பாக சில உணவுகளை நாம் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்நிலையில் எது சரியான உணவு என்பதை தெரிந்துகொள்வோம்.

அதிக நார்சத்து உள்ள உணவுகள்: முழு தானிய வகைகள், பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டிம். இந்த உணவுகள் நமது ஜீரணத்தை சரியாக்கி, தொடர்ந்து பசி எடுக்காமல் பார்த்துகொள்கிறது.

இந்நிலையில் புரத சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது நமது சதைகளை அது சரிபடுத்துவதோடு, அதிக உணவை சாப்பிட்டதுபோல ஒரு மன நிறைவை கொடுக்கும். மீன், சிக்கன், பருபுகள், முட்டை ஆகியவையில் புரோட்டீன் சத்து உள்ளது.

முழு தானிய உணவுகள்: குயினோவா, பிரவுன் ரைஸ், ஒட்ஸில் அதிக நார்சத்து இருக்கிறது. இவை நாள் முழுவதும் சக்தியை கொடுப்பதுடன், வயிறு முழுவதும் சாப்பிட்டது போல உணர்வை கொடுக்கும்.

லீன் புரத சத்து நிறைந்த உணவுகள், கோழிக் கறியின் நெஞ்சுப்பகுதி, வான்கோழி, டோப்பு, மீன், கிரீக் யோகர்ட் ஆகியவற்றை நாம் சாப்பிட்டல் நமது  சதைகளின் அளவு அதே போல் நீடிக்கும்.

இந்நிலையில் மூங் பருப்பு வகை நாம் எடுத்துகொள்ள வேண்டும், அதில் அதிக புரோட்டீன் சத்து, நார்சத்து இருக்கிறது, இந்நிலையில் இதை சாப்பிடும்போது, வயிறு நிரம்பியது போல உணர வைக்கும் ஹார்மோன் சோலக்ஸ்ட்டோகினின் (cholecystokinin) உற்பத்தி செய்கிறது. இந்நிலையில் இதில் இருக்கும் தர்மிக் தாக்கம் வயிற்று கொழுப்பை குறைக்கிறது.

மோர்: இதனால் உடலுக்கு கால்சியம் கிடைப்பதோடும். நாம் மோர் குடிக்கும்போது குறைவாக சாப்பிடுவோம்.

சீயா விதைகள் : இதில் ஓமேகா 3 பேட்டி ஆசிட் இருப்பதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது.

ராகி: இதில் மெத்தியோனின்( methionine) என்ற முக்கிய அமினோ ஆசிட் இருக்கிறது. இது அதிக கொழுப்பை சேரவிடாமல் பார்த்துகொள்கிறது.

காலிபிளவர்: அதிக நார்சத்து உள்ளது. மேலும் புரத சத்தும் உள்ளது. இந்நிலையில் இதில் குறைந்த கலோரிகளே உள்ளது என்பதால் நாம் இதை சாப்பிட முடியும்.

இதுபோல பாதாம், வால்நட், சியா விதைகள், பிளக்ஸ் விதைகளில் கூட நார்சத்து மற்றும் புரத சத்து உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: And the best food items for weight loss are