இஞ்சி வைத்து செய்யப்படும் இந்த ஆந்திர அல்லம் சட்னியை நீங்களும் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
இஞ்சி - 250 கிராம்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 7
காய்ந்த மிளகாய் - 6
புளி - 2 துண்டு
வெல்லம் - 1 துண்டு
துருவிய தேங்காய் - 2 கப்
கொத்தமல்லி இலை - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
தாளிக்க
உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1 '
பெருங்காய தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிதளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
முதலில் இஞ்சி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். அடுத்து அடுப்பில் கடாய் வைத்து இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் , புளி துண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும், இதில் தேங்காய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
இதில் உப்பு சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து ஆறவிடவும். கலவை ஆறியதும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். அடுத்து கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காய தூள் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்க்கவும். அவ்வளவு தான் சுவையான அல்லம் சட்னி தயார்.