ஆந்திராவில் உள்ள மிகவும் ஃபேமஸான பெல்லம் கவலு சுவையாக வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். இந்த மாதிரி ஒரு ரெஸிபி நிறைய பேருக்கு தெரியாது. ஆனால் அதை எப்படி சுவயாக வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று ஹோம்குக்கிங் யூடியூப் சேனலில் கூறியதாவது,
தேவையான பொருட்கள்
மைதா
ரவா
உப்பு
பொடித்த சர்க்கரை
ஏலக்காய் தூள்
வெல்லம்
நெய்
செய்முறை
ஒரு பெரிய கிண்ணத்தில் மைதா சேர்த்து அடுத்து அதில் ரவா, உப்பு, தூள் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
மேலும் நெய் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் படிப்படியாக தண்ணீர் சேர்த்து மாவை பிசைந்து சிறிது நெய் தடவி 15 நிமிடம் ஊற விடவும்.
மாவை சிறு உருண்டைகளாகப் பிரித்து அச்சின் மீது மாவை வைத்து, ஷெல்ஸ் வடிவில் திரட்டி எடுக்கவும்.
பின்னர் கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும், திரட்டிய மவை மெதுவாக சேர்த்து மிதமான சூட்டில் பொன்னிறமாக வறுக்கவும்.
பெல்லம் கவலு | Bellam Gavvalu Recipe In Tamil | Snacks Recipes | Festival Sweets | Sweet Shells
பின்னர் அவற்றை எடுத்து ஆறவிடவும். அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் துருவிய வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து நெய் சேர்த்து நன்கு கிளறவும்.
அதில் வறுத்து ஆறவைத்துள்ள ஷெல்ஸ்களை சேர்த்து மெதுவாக கலண்ட்து ஒரு 10 நிமிடம் வைத்தால் போதும் சுவையான பெல்லம் கவலு தயாராகிவிடும்.
இதை ஸ்நாக்ஸ் மாதிரியும் எடுத்து கொள்ளலாம். குழந்தைகளுக்கு ஒரு ஹெல்தியான ஸ்வீடாக இருக்கும். குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்கலாம். 2 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். நன்றாக இருக்கும்.