காய்கறிகளை வெறுப்பவர்களும் விரும்பி உண்ணும் ஒரு சுவையான சைட் டிஷ் என்றால் அது ஆந்திரா ஸ்டைல் பீன்ஸ் கறிதான். இது சாம்பார் சாதம், ரசம் சாதம் மற்றும் சப்பாத்திக்கு சிறந்த துணையாக இருக்கும். சத்தான மற்றும் சுவையான இந்த பீன்ஸ் கறியை எப்படித் தயாரிப்பது என்று ட்ரடிஷனலி மாடர்ன்ஃபுட் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கடலை எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
வெங்காயம் (நறுக்கியது) - 1/2 கப்
பூண்டு - 4 பல்
எள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்
பச்சை பீன்ஸ் - 200 கிராம்
உப்பு
வேர்க்கடலை (வறுத்து இடித்தது) - 3 டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் (துருவியது) - 3 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
ஒரு கடாயில் கடலை எண்ணெய் சேர்த்து, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்துத் தாளிக்க வேண்டும்.
பின்பு வெங்காயம், எள், பூண்டு சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது, நறுக்கிய பீன்ஸ் சேர்த்து, மிதமான தீயில் 3 நிமிடங்கள் வதக்க வேண்டும்.
தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, கடாயை மூடி, பீன்ஸ் மென்மையாகும் வரை வேகவிடவும். கடைசியாக, துருவிய தேங்காய் மற்றும் இடித்த வேர்க்கடலை சேர்த்து, 2-3 நிமிடங்கள் வாசனை வரும் வரை வதக்கி இறக்க வேண்டும்.
ஆந்திரா ஸ்டைல் என்பதால காரம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். தேவைப்பட்டால் காரம் கொஞ்சம் குறைவாக சேர்த்துக்கொள்ளலாம். சுவையாக இருக்கும். அப்படியும் காரம் அதிகரித்துவிட்டால் எண்ணெய் சிறிது சேர்த்துக்கொள்ளலாம் சுவையாக இருக்கும்.