ஆந்திர ஸ்டைல் கமகம பூண்டு இட்லி பொடி செய்வது பற்றி பார்ப்போம். இவ்வாறு செய்யும் போது 2 மாதங்கள் வரை கெடாது எனக் கூறப்பட்டுள்ளது.
கடலைப் பருப்பு - 1 கப்
உளுத்தம் பருப்பு - அரை கப்
வர மிளகாய்- 8
காய்ந்த மிளகாய் - 8
எள் - 2 ஸ்பூன்
பொட்டுக் கடலை - 3 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயப் பொடி - 2 சிட்டிகை
பூண்டு பல் - 12
செய்முறை
முதலில் அடுப்பில் கடாய் வைத்து கடலைப் பருப்பு போட்டு வறுத்து தனியாக வைக்கவும். அடுத்து அதே கடாயில் உளுந்தப்பருப்பு சேர்த்து நன்றாக வறுக்கவும், உளுந்தம் பருப்பு வறுப்பட்டதும், அதே தட்டில் மாற்றிக் கொள்ளவும்.
இப்போது அதே கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து அதில், வரமிளகாய் சேர்த்து வதக்கவும். மிளகாய் நன்கு வதங்கியதும் எள் சேர்க்க வேண்டும். இப்போது எள் வெடிக்கத் துவங்கியதும் பொட்டு கடலை, கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். இதில், தேவைக்கேற்ப உப்பும் சேர்க்கவும்.
இதை அனைத்தும் ஆறிய பின்னர் மிக்சி ஜாரில் சேர்த்து அரைக்கவும். அதனுடன் பூண்டு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக அரைக்கவும். அவ்வளவு தான் சுவை, கம கம ஆந்திர ஸ்டைல் பூண்டு இட்லி பொடி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“