/indian-express-tamil/media/media_files/2025/05/27/IkGGUWDNZIBz1U4DLVzH.jpg)
ஒரு சில சைட்டிஷ் மட்டுமே அனைத்து விதமான உணவுகளுடனும் சேர்த்து சாப்பிடுவதற்கு ஏற்றதாக இருக்கும். அந்த வகையில், ரசம், தயிர் சாதம் போன்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக் கூடிய ஆந்திரா ஸ்டைல் வெண்டைக்காய் உருளைக்கிழங்கு பொறியல் எப்படி செய்ய வேண்டும் என்று தனது யூடியூப் சேனலில் வெங்கடேஷ் பட் தெரிவித்துள்ளார்.
தேவையான பொருட்கள்:
காய்ந்த மிளகாய்கள்,
கறிவேப்பிலை,
வேர்க்கடலை,
வெள்ளை எள்,
தேங்காய்,
வெண்டைக்காய்,
உருளைக்கிழங்கு,
நெய்,
கடலை எண்ணெய்,
கடுகு,
பூண்டு,
மிளகாய் பொடி மற்றும்
தண்ணீர்
செய்முறை:
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 10 காய்ந்த மிளகாய்கள், ஒரு கொத்து கறிவேப்பிலை, ஒன்றரை டேபிள் ஸ்பூன் வறுத்த வேர்க்கடலை, ஒரு டேபிள் ஸ்பூன் வெள்ளை எள், வறுத்த கொப்பரை தேங்காய் துருவல் சேர்த்து வறுக்க வேண்டும். அதன் பின்னர், இதனை மிக்ஸியில் பொடியாக அரைக்க வேண்டும்.
இதையடுத்து, வெண்டைக்காய் மற்றும் உருளைக்கிழங்கை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இனி, அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் நெய் ஊற்ற வேண்டும். இதில், வெண்டைக்காயை போட்டு நன்றாக வறுக்க வேண்டும். வெண்டைக்காய் நிறம் மாறியதும் தனியாக எடுத்துவிடலாம். அதே கடாயில் உருளைக்கிழங்கையும் போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
இனி ஒரு கடாயில் கடலை எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய்கள், அரை ஸ்பூன் கடுகு, ஒரு கொத்து கறிவேப்பிலை, 2 டீஸ்பூன் நறுக்கிய பூண்டு, அரை வெங்காயம், கால் ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் மிளகாய் பொடி, 50 மிலி தண்ணீர் சேர்த்து கலக்க வேண்டும்.
இந்த மசாலாவுடன் வறுத்த வெண்டைக்காய் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து கிளற வேண்டும். இப்போது முதலில் அரைத்து வைத்திருந்த மசாலாவை சேர்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் ஆந்திரா ஸ்டைல் வெண்டைக்காய் உருளைக் கிழங்கு பொறியல் ரெடி ஆகி விடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.