உடல் நலனுக்காக பலரும் கிரீன் டீ குடிப்பதை நாம் பார்த்திருப்போம். அதன் மூலம் கிடைக்கும் சத்துகள் குறித்து கேள்விப்பட்டிருப்போம். ஆனால், கிரீன் டீயைக் காட்டிலும் 250 மடங்கு சத்துள்ள பானம் தயாரிப்பது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
சிறிய துண்டு இஞ்சி,
1 நெல்லிக்காய்,
4 புதினா இலைகள் ,
1 ஸ்பூன் ஓமம்,
தண்ணீர்
குறிப்பிடப்பட்ட அளவிற்கு நெல்லிக்காய், புதினா இலைகள், ஓமம் மற்றும் இஞ்சி ஆகியவற்றை எடுத்து போதுமான அளவு தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். அதில் உள்ள சாறு முற்றிலும் கலந்த பின்னர், நீரை சுமார் 30 நிமிடங்கள் ஆற வைக்க வேண்டும்
அதன் பின்னர் நீரை வடிகட்டி பருகினால், உடலுக்கு தேவையான அன்டி ஆக்சிடென்ட் நிரம்பிய சத்து மிகுந்த பானம் தயாராகி விடும். இதன் மூலம் கேன்சர் பரவுவதைக் கூட ஆரம்ப கட்டத்தில் கட்டுப்படுத்தலாம் என வெங்கடேஷ் பட் கூறுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“