எப்பவுமே சாப்பாட்டுக்கு சைட் டிஷா வெறும் அப்பளம் மட்டும் தான் சாப்பிடுறீங்களா? அப்போ ஒருமுறை அதை அப்பளத்தை வைத்து இந்த அப்பளம் கூட்டு செய்து பாருங்கள். உங்களுக்கே ரொம்ப பிடிக்கும். அதுவும் நம்ம செஃப் தாமு ஸ்டைலில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தக்காளி
வெங்காயம்
கொத்தமல்லி & கறிவேப்பிலை
மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
உப்பு
கடலை பருப்பு
பூண்டு
கடுகு
உளுத்தம் பருப்பு
அப்பளம்/பப்பட்
தேவையான அளவு கடலை பருப்பை எடுத்து நன்கு கழுவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு ஒரு குக்கரில் ஊறவைத்த கடலை பருப்பு மற்றும் அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, தேவையான அளவு மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வேக வைப்பதற்கு தேவையான தண்ணீர் ஊற்றி கலந்துவிட்டு மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.
சரியாக 3 முதல் 4 விசில் விட்டு இறக்கவும். பருப்பு தொட்டு பார்த்தால் வெந்து சாப்டான பதத்தில் இருக்க வேண்டும். பிறகு அப்பளத்தையும் பொறித்து எடுத்து கொள்ள வேண்டும். விசில் வந்ததும் குக்கர் மூடியை மட்டும் திறந்து அடுப்பை சிம்மில் வைத்து பருப்பை கொதிக்க வைக்க வேண்டும். அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.
பிறகு ஒரு கிண்ணத்தில் தாளிப்பதற்காக எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து வதக்கி அதனுடன் நறுக்கிய பூண்டு சேர்த்து தாளித்து எடுத்து பருப்பில் கொட்ட வேண்டும்.
அடுப்பில் கொதித்து கொண்டிருக்கும் பருப்பில் பொறித்த அப்பளத்தை உடைத்து போட்டு பின்னர் நன்கு கலந்து விடாவும். பருப்பில் உள்ள தண்ணீர் சற்று வற்றி கூட்டு பதத்திற்கு வரும் வரை சுமாராக ஒரு இரண்டிலிருந்து மூன்று நிமிடம் வேகவைத்து இறக்கவும்.
இறக்குவதற்கு முன்னதாக மேலே கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான அப்பளம் கூட்டு ரெடியாகிவிடும். இதனை வெரைட்டி ரைஸ் மற்றும் மதிய நேரத்தில் சாப்பாட்டிற்கு வைத்தும் சாப்பிடலாம். இல்லையென்றால் வெறும் சாதத்தில் இதனை சேர்த்து பிசைந்து சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“