ஆப்பிள், மாதுளை கொண்டு சுவையான கேக் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
மைதா மாவு – 2 கப்
சர்க்கரை – 1 டீஸ்பூன்
உப்பு – கால் டீஸ்பூன்
ஆப்பிள் – 1
மாதுளை முத்துக்கள் – 1 கப்
ஃப்ரூட் ஜாம் -1 கப்
துருவிய சீஸ் – 1 கப்
செய்முறை
ஆப்பிளைத் தோல் நீக்கி மீடியம் சைஸ் ஸ்லைசாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு போட்டு அதில் உப்பையும், சர்க்கரையையும் சேர்த்து தேவையான நீர் ஊற்றி தோசைமாவு பதத்தில் கரைக்கவும். இப்போது அடுப்பில் நான்ஸ்டிக் பான் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றி மெல்லிய தோசையாக சுடவும். இப்போது அதில் துருவிய சீஸ் சேர்த்து அதில் மெல்லிய ஸ்லைசான 6 ஆப்பிளை அடுக்கி அதன் மேல் ஜாம் சேர்க்கவும். அடுத்து மாதுளை தூவவும். தோசை வெந்ததும் ஆப்பிளும், மாதுளையும் தெரிவது போல அரை வட்டமாக மடக்கி எடுத்து சாப்பிடவும். அவ்வளவுதான் ஆப்பிள் பான் கேக் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“