அரைக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. மதிய உணவுக்கு எவ்விதத்திலும் கெடுதல் ஏற்படுத்தாது. இந்த கீரை உடல் பலவீனத்தை போக்கும், ஜீரண சக்திக்கு மிகவும் சிறந்த உணவாகும். அப்படிப்பட்ட அரைக்கீரையில் செஃப் தாமு ஸ்டைலில் பொரியல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
அரைக்கீரை
வெங்காயம்
காய்ந்த மிளகாய்
கடுகு
பெருங்காயம்
உப்பு
எண்ணெய்
தேங்காய் துருவல்
பூண்டு
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதில் நசுக்கிய பூண்டை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பூண்டு வாசம் வரும்போது நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். இவை அனைத்தும் ஐந்து முதல் பத்து நிமிடம் நன்கு வதக்க வேண்டும். பின்னர் அதில் கழுவி வைத்துள்ள கீரையை சேர்த்து தண்ணீர் விடாமல் உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுப்பை சிம்மில் வைத்து மெதுவாக கீரையை வேக வைக்க வேண்டும். கீரை வெந்தவுடன் சுருங்கிவிடும். பாத்திரத்தில் கீரை அடிபிடிக்காதவாறு இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை அதனை வதக்கி விட வேண்டும்.
கீரை வதங்கியுடன் மேலே தேங்காய் துருவலை சேர்த்து வதக்கவும். தேங்காய் துருவல் நிறம் மாறியவுடன் நல்ல மணத்துடன் கூடிய அரைக்கீரை பொறியல் ரெடி ஆகி விடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“