scorecardresearch

பிரெஞ்சு பிரைஸ் தொடர்ந்து சாப்பிட்டால் மன அழுத்தம் அதிகரிக்கலாம்? ஆய்வு சொல்வது இதுதான்

இதனால் நாம் அதிக வருடங்கள், சுவையான உணவுகள் மற்றும் உணவு சாப்பிட பின்பு ஏற்படும் இந்த நிறைவான உணவுடன் பழகிவிட்டால், இந்த உறவை உடைப்பது மிகவும் கடினமான ஒன்று என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

பிரெஞ்சு பிரைஸ் : மன அழுத்தம் அதிகரிக்கலாம்
பிரெஞ்சு பிரைஸ் : மன அழுத்தம் அதிகரிக்கலாம்

சில உணவுகளை நாம் சாப்பிடும்போது நமது மூளையில், டோபமைன் என்பது சுரக்கும். சில உணவுகளை சாப்பிடும்போதுதான் இந்த உணர்வு ஏற்படும். இந்நிலையில் நாம் மிகவும் அழுத்தமாக அல்லது சலிப்பாக உணரும் நாட்களில் மீண்டும் இந்த உணவுகளை நமது மூளை தேடுகிறது.

இந்நிலையில் இது எப்போதும் பொறித்த உணவாக இருக்கிறது. இதனால் நாம் அதிக வருடங்கள், சுவையான உணவுகள் மற்றும் உணவு சாப்பிட பின்பு ஏற்படும் இந்த நிறைவான உணவுடன் பழகிவிட்டால், இந்த உறவை உடைப்பது மிகவும் கடினமான ஒன்று என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

சினாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில், பிரெஞ்சு பிரைஸ் அல்லது பொறித்த உருளைக்கிழங்கு சாப்பிடுவதால், நமது மன அழுத்தம்  இன்னும் அதிகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இதுபோல பொறித்த உணவுகள், அதாவது பிரெஞ்சு பிரைஸை சாப்பிடும் நபர்களுக்கு, 12 % பேருக்கு  பதற்றம் மற்றும் இது தொடர்பான சிக்கல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 7 % மன அழுத்தம் ஏற்படும் அபாயம் இவர்களுக்கு இருக்கிறது.

இந்நிலையில் இந்த ஆய்வு அப்படி கூறினாலும், பொறித்த மட்டும் அதிக கார்போஹைட்ரேட் உணவுகள் உங்களுக்கு ஒரு மன நிறைவை தருவதால், இது ஒருவகை அழுத்தத்திற்கு வழிவகுக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த உணவு கண்டிப்பான தேவையாக மாறும்போது இது அழுத்தமாக மாறுவதாக கூறப்படுகிறது.

நிச்சயமாக பொறித்த உணவுகள், உடல் எடையை அதிகரிக்கிறது, ரத்த அழுத்தம், இதய ரத்த குழாய்களை பாதிக்கும் நோய் ஏற்பட காரணமாக இருக்கிறது. இந்நிலையில் பொறித்த உணவுகளை தொடர்ந்து பல வருடங்கள் அதிகமாக சாப்பிடுவதால், மன அழுத்தம் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Are french fries worsening our anxiety and depression