Advertisment

இதய பாதுகாப்புக்கு விட்டமின் சி, இ: தினமும் எவ்வளவு தேவை?

ஆன்டி ஆக்ஸிடெண்ட் அதிகம் உள்ள உணவுகள் சாப்பிடுவதால், இதய நோய் கட்டுப்படுத்தப்படும் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. வைட்டமின் இ மற்றும் வைட்டமின் சி என்ற சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

author-image
WebDesk
New Update
இதய பாதுகாப்புக்கு விட்டமின் சி, இ: தினமும் எவ்வளவு தேவை?

ஆன்டி ஆக்ஸிடெண்ட் அதிகம் உள்ள உணவுகள் சாப்பிடுவதால், இதய நோய் கட்டுப்படுத்தப்படும் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. வைட்டமின் இ மற்றும் வைட்டமின் சி என்ற சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் வீக்கத்தை குறைக்கிறது. நுரையீரல் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பை குறைக்கிறது. ஆரோக்கியமான தோல், கூந்தலுக்கும் இது உதவுகிறது. தசை பிடிப்பு மற்றும் வலி ஏற்படாமல் தடுக்கவும் இது உதவுகிறது.

இந்நிலையில் வைட்டமின் சி மற்றும் இ எந்த அளவில் எடுத்துகொள்ள வேண்டும் என்பதை கருத்தில்கொள்ள வேண்டும். 1000 மில்லி கிராம் வைட்டமின் இ மற்றும் 2000 மில்லி கிராம் வைட்டமின் சி வரை ஒரு நாளைக்கு உடலால் தாங்க முடியும். ஆனால் ஒரு மனித உடல் 4 மில்லி கிராம் வரை வைட்டமின் இ மற்றும் 90 மில்லிகிராம் வைட்டமின் சி வரைத்தான் உடல் தாங்கும்.

இந்நிலையில் அதிக அளவில் வைட்டமின் சி மற்றும் இ எடுத்துக்கொள்ள கூடாது என்பது குறிப்பிடதக்கது. மல்டி வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடுவதைவிட இயற்கான பழங்கள் மற்றும் காய்கறிகளில் இந்த சத்துக்கள் இருந்தால் அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment