செப் தீனா செய்த அரிசி பாயசத்தை நீங்கள் வீட்டில் செய்து பாருங்க. செம்ம சுவையா செய்யலாம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி 150 கிராம்
கசகசா- 2 ஸ்பூன்
தேங்காய் – 3 துண்டு
பால் – 250 எம்.எல்
வெல்லம் 150 கிராம்
ஏலக்காய்- ¼ டேபிள் ஸ்பூன்
நெய் – 2 ஸ்பூன்
நட்ஸ் : 1 ஸ்பூன்
செய்முறை : பச்சரிசி, கசகசாவை நன்றாக கழுவ வேண்டும். இரண்டையும் 4 மணி நேரம் ஊற வைக்கவும். தொடர்ந்து இதை நீரில் இருந்து எடுத்து மிக்ஸியில் சேர்த்து, தேங்காய் சேர்த்து அரைக்கவும். நன்றாக மையாக அரைக்க வேண்டும். தொடர்ந்து இதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அடுப்பை ஆன் செய்யவும். தொடர்ந்து இதை கிளரி கொண்டே இருக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். பாலை நாம் சூடு செய்து இதில் சேர்க்கவும். தொடர்ந்து கிளர வேண்டும். தொடர்ந்து இதில் வெல்லம் சேர்க்கவும். தொடர்ந்து இதை கிளர வேண்டும். தொடர்ந்து இதில் சுடு தண்ணீர் சேர்க்கவும். தொடர்ந்து ஏலக்காய் தூள் சேர்த்து கிளர வேண்டும். கடைசியாக நெய் சேர்த்து கிளரவும். மேலாக நட்ஸ் தூவ வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“