உடல் எடையை குறைப்பது ஒரு சவாலான விஷயமாகத்தான் இருக்கிறது. இந்நிலையில் அருகம்புல் சாறு உடல் எடையை குறைக்கும் என்று அனிதா குப்புசாமி கூறியுள்ளார்.
புல் வகைகளில் ராஜ புல் வகை அருகம்புல். இதில் அதிக மருத்துவ நன்மைகள் இருக்கிறது. எவ்வளவு உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அப்படி நாம் அருகம்புல் சாறை குடிக்க வேண்டும். அனுபவப் பூர்வமாக நான் கண்டது என்று அனிதா குப்பு சாமி கூறுகிறார். . இந்நிலையில் இதை எப்படி செய்யலாம் என்பதை தெரிந்துகொள்வோம்.
செய்முறை: 2 கைபிடி அளவு அருகம்புல்லை எடுத்துக்கொள்ளுங்கள், அதை நன்றாக கழுவ வேண்டும் . தொடர்ந்து அதை மிக்ஸியில் சேர்த்து 7 மிளகு, பூண்டு தட்டி சேர்த்து கொள்ளுங்கள். தொடர்ந்து தண்ணீர் சிறுது சிறிதாக சேர்த்து அரைக்கவும்.
கடைசியாக அதை வடிகட்ட வேண்டும். வெயில் காலத்தில் இந்த சாறுடன் இளநீர் சேர்த்து குடிக்கலாம்.
இப்படி 48 நாட்கள் குடித்தால் உடல் எடை குறையும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் இதை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil