வெள்ளைப் பூசணியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி சத்து உள்ளது. கால்சியம், பொட்டாசியம், இரும்புசத்து, பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற வளமான சத்துக்கள் வெள்ளைப் பூசணியில் நிறைந்துள்ளன. இந்த நிலையில் வெள்ளை பூசணியில் பொரியல் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வெள்ளைப் பூசணிக்காய் துண்டுகள் -2 கப்
வேர்க்கடலை – கால் கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
கடுகு, உளுந்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மேலே தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் ஒவ்வொன்றாகப் போட்டு தாளிக்கவும். அடுத்ததாக பூசணித் துண்டுகள் மற்றும் உப்பு சேர்க்கவும். தண்ணீர் ஊற்ற வேண்டாம், மூடி போட்டு வேகவிடவும். 10 – 15 நிமிடங்களில் வெந்துவிடும். இடையிடையே எடுத்து கிளறிவிடவும். காய் வெந்ததும் வேர்க்கடலையை மிக்ஸியில் போட்டு சுற்றி அதில் சேர்க்கவும். வேர்க்கடலைக்கு பதில் தேங்காய்த்துருவலும் சேர்க்கலாம். ஒரு முறை கிளறிவிட்டு இறக்கவும். அவ்வளவு தான் சத்தான வெள்ளைப் பூசணி பொரியல் ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/