முந்திரிக் கொத்து மிகவும் பிரபலமான ஸ்வீட். பொதுவாக நாம் வீட்டில் செய்ய யோசிப்போம். ஆனால் மிகவும் எளிதாக செய்யும் ஸ்வீட் இது.
செய்முறை
பச்சை பயிறு
வெல்லம்
ஏலக்காய்
அரிசி மாவு
மைதா மாவு
தேங்காய் துருவல்
எள்ளு
உப்பு
எண்ணெய்
மஞ்சள் தூள்
தண்ணீர்
நெய்
செய்முறை
முதலில் பச்சை பயிறை நன்றாக வறுக்க வேண்டும். அதை மிக்ஸியில் போட்டு, ஏலக்காய் சேர்த்து அரைத்துகொள்ளுங்கள். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி தேங்காய் துருவல் மற்றும் எள்ளை போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். இந்நிலையில் அரைத்த பச்சை பயிறு மாவு மற்றும் இந்த கலவையை ஒன்றை சேர்த்துக்கொள்ளுங்கள்.
இந்நிலையில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி வெல்லம் சேர்த்து வெல்ல பாகு தயார் செய்யுங்கள். தொடர்ந்து அந்த வெல்லப் பாகை பச்ச பயிறு கலவையில் சேர்க்கவும். வெல்ல பாகு சேர்த்து பிசைந்து கொண்டவுடன். சிறிய உருண்டைகளாக பிடித்துக்கொள்ளுங்கள்.
தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் அரிசி மாவும், மைதா மாவு , உப்பு, தண்ணீர் சேர்த்து கரைத்துக்கொள்ளுங்கள். தற்போது இந்த உருண்டைகளை இந்த மாவில் முக்கி எடுத்து, கொதிக்கும் எண்ணெய்யில் போட்டு பொறிக்கவும். சுவையான முந்திரி கொடுத்து ரெடி.