அவல் அரைத்து… சுவையான இடியாப்பம் வீட்டில் இப்படி ட்ரை செய்து பாருங்க

அவல் இடியாப்பம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

அவல் இடியாப்பம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Aval id

சுவையான அவல் இடியாப்பம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

அவல் – 5 கப்
எண்ணெய் – 1 ஸ்பூன்
தேங்காய் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
சர்க்கரை – தேவையான அளவு

செய்முறை 

முதலில் சல்லடை எடுத்து அவல் போட்டு சலித்து எடுத்துக் கொள்ளவும். பின் அதை கடாயில் போட்டு லேசமாக கலர் மாறாமல் வறுக்கவும். பின் ஆற வைத்து மிக்ஸிக்கு மாற்றி அரைக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் 1 கப் அவலுக்கு 1 கப் தண்ணீர் வீதம் 4.5 கப் தண்ணீர் ஊற்றி எண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். 

Advertisment
Advertisements

தண்ணீர் நன்றாக கொதித்ததும் அரைத்து வைத்த அவல் சேர்த்து கிளறவும். அவல் வெந்து பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் பொழுது அடுப்பை அணைத்து விடவும். பின்னர் வேகவைத்த இந்த மாவை வேறு தட்டிற்கு மாற்றி கொஞ்சம் தண்ணீ ர் சேர்த்து பிசையவும். 

மாவு பதத்திற்கு வந்த பின், இடியாப்ப அச்சில் வைத்து எப்போது போல் இடியாப்பம் பிழிந்து எடுக்கவும். அடுத்தாக இட்லி பாத்திரத்தில் இதை வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். அவ்வளவு தான். சுவையான அவல் இடியாப்பம் ரெடி. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: