டெய்லி இட்லி, தோசை, உப்புமா செஞ்சி அலுத்து போனவர்களுக்கு இந்த டிஷ் ரொம்பவே பயனுள்ளதாக இருக்கும். ஹெல்தியான உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ள அவல் கார புட்டு எப்படி செய்வது என்று பார்ப்போம். அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் இதை அடிக்கடி செய்து கொடுத்தால் ஆரோக்கியமாக இருக்கும். அப்படி ஆரோக்கியமான அவல் கார புட்டு எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
அவல்
கடுகு
உளுந்து
சீரகம்
பூண்டு
வெங்காயம்
தக்காளி
மஞ்சள்தூள்
மிளகாய்த்தூள்
மல்லித் தூள்
பெருங்காயம்
கேரட்
பீன்ஸ்
உருளைக்கிழங்கு
எண்ணெய்
செய்முறை
அவல் ஒரு கப் அளவிற்கு எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் லேசாக தண்ணீர் ஊற்றி புட்டு பதத்திற்கு உதிரி உதிரியாக உதிர்த்து வைக்கவும். அதனை இட்லி பாத்திரத்தில் 5 நிமிடம் வைத்து அவித்து எடுக்கவும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, சீரகம் முறையே அரை டீஸ்பூன் சேர்த்து தாளிக்கவும். பின்னர் நறுக்கிய பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் நன்கு வறுபட்டதும் தக்காளி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
தக்காளி மசிந்து நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து மசாலா வாசனை போக வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
காய்கறிகள் நன்கு வறுபட்டதும் உதிர்த்து வைத்துள்ள அவலை சேர்த்து நன்கு பிரட்டி எடுத்து உப்பு சரியாக இருக்கிறதா என்பதை பார்த்து இறக்கினால் போதும் சுவையான அவல் கார புட்டு ரெடியாகிவிடும்.