நாட்டு சர்க்கரை, நெய் சேர்த்த சிம்பிளான அவல் லட்டு ரெசிபி செய்வது குறித்து பார்ப்போம்.
அவல் - 2 கப்
நாட்டு சர்க்கரை - 1 கப்
பால் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 1/4 கப்
தேங்காய் துருவல் - 1/4 கப்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
பாதாம் - 10
முந்திரி, திராட்சை - 10
செய்முறை
முதலில் அடுப்பில் பாத்திரம் வைத்து சிறிதளவு நெய் ஊற்ற வேண்டும். நெய்யில் அவலை சேர்த்து நிறம் மாறாமல் பதமாக வறுக்க வேண்டும். அவலை இறக்கி சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ள வேண்டும்.
அதே பாத்திரத்தில் தேங்காய் துருவல் சேர்த்து லேசாக வறுத்து வைக்கவும். பாதாம், முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது பொடித்த அவல் பொடியுடன், வறுத்த தேங்காயை சேர்த்து அரைக்கவும்.
பின்னர் இதை அடுப்பில் உள்ள பாத்திரத்தில் போட்டு லேசாக வறுக்கவும். அடுத்தாக தேவையான அளவு நெய், பால் சேர்த்து கலக்கி இறக்கவும். இப்போது இதை அப்படியே உருண்டைகளாக உருட்டி சாப்பிடவும். குழந்தைகளுக்கு ஹெல்தி ஸ்நாக்ஸ் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“