தேவையான பொருட்கள்
அவல்- 400 கிராம்
பெரிய வெங்காயம்- 150 கிராம்
பச்சை மிளகாய்- 4
இஞ்சி- 2 டேபிள் ஸ்பூன்
நிலக் கடலை (வேக வைத்தது)-1/2 கப்
தேங்காய் துருவல்- 1/4 கப்
கடுகு, கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்- 1 டீஸ்பூன்
உப்பு- தேவையானஅளவு
எண்ணெய்- 4 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிதளவு
கொத்துமல்லித் தழை- சிறிதளவு
எலுமிச்சைச் சாறு- 1 டீஸ்பூன்
செய்முறை
முதலில் அவலைக் கழுவி தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி நனைத்து கழுவி எடுக்கவும். அதன் பின், கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி வெங்காயம் சேர்க்கவும்.
வெங்காயம் வதங்கி பின் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நிலக்கடலை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின் இதனுடன் கழுவி வைத்த அவலைச் சேர்த்து நன்கு கிளறவும். கடைசியான எலுமிச்சைச் சாறு, கொத்துமல்லித் தழை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான நிலக்கடலை அவல் உப்புமா ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“