வெயில் காலத்தில் ஒரு கப் தயிர் சாப்பிடுவது என்பது உடலுக்கு மட்டும் நன்மை அல்ல மனதளவில் அது ஒரு புத்துணர்வை கொடுக்கும். ஜீரணத்திற்கு இது பெரிதும் உதவுகிறது. மற்ற சத்துக்களை நம் உடல் எடுத்துகொள்ள தயிர் உதவுகிறது. இதில் வைட்டமின்ஸ், மினரல்ஸ் இருக்கிறது. இதில் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் சில உணவுகளுடன் நாம் தயிரை எந்நாளும் எடுத்துகொள்ள கூடாது.
மீன் – மீனுடன் தயிர் சேர்த்து எப்போதும் சாப்பிடக்கூடாது. இரண்டிலும் புரோட்டின் இருக்கிறது. விலங்கிடமிருந்து எடுக்கப்படும் புரோட்டினும் – தாவரத்தில் இருக்கும் புரோட்டினும் ஒன்றாக சேரும்போது, சாரியாக ஜீரணமாகாது. இது வயிறு தொடர்பான நோய்களை உருவாக்கும்.
எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளுடன் தயிர் சேர்த்து சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால், ஜீரணமாகும் முறையில் தொய்வு ஏற்படும். நாள் முழுவதும் சோம்பலாக இருக்கும். இதனால் பரோட்டா, பூரி உள்ளிட்ட எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளுடன் தயிர் சேர்த்துகொள்ளக் கூடாது.
மாம்பழத்தோடு தயிர் சேர்க்கவே கூடாது. மாம்பழம் இயற்கையாகவே சூடான தன்மை கொண்டது. இதேவேளையில் தயிர் இயற்கையாகவே குளிரானது. இதனால் இது இரண்டையும் சேர்த்தால், அஜீரணம் ஏற்பட்டு தோல் ரீதியான பிரச்சனைகள் உருவாகும். மேலும் இது உடலுக்கு நஞ்சாக மாறும்.
பால்- கேட்பதற்கு வேண்டுமானால் இது சற்று பொருந்தாமல் இருக்கலாம். ஆனால் பாலுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதால், வயிறு உப்புதல், அஜீரணம் ஏற்படும்.