scorecardresearch

பாலிஷ்டு ஒயிட் பொன்னி அரிசி சாப்பிடுறீங்களா? இதை கொஞ்சம் கவனிங்க பாஸ்!

தமிழக பாரம்பரியம் அரிசி சாப்பாடாக இருந்தாலும், வெள்ளை அரிசி சாதத்தை நாம் கைவிட வேண்டும் என்று சித்த மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.

பாலிஷ்டு ஒயிட் பொன்னி அரிசி சாப்பிடுறீங்களா
பாலிஷ்டு ஒயிட் பொன்னி அரிசி சாப்பிடுறீங்களா?

தமிழக பாரம்பரியம் அரிசி சாப்பாடாக இருந்தாலும், வெள்ளை அரிசி சாதத்தை நாம் கைவிட வேண்டும் என்று சித்த மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.

எந்த அரிசியை நாம் தேர்வு செய்ய வேண்டும் என்று சித்த மருத்துவர் சிவராமன் பேசுகிறார். அவர் பேசியதிலிருந்து . “ நமது மரபில் சாதம், மாமிசம், கூட்டு என்று அதிகமான உணவை எடுத்துக்கொள்ளும் பழக்கத்தை கைவிட வேண்டும். நாம் அரிசியை சற்று குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். வெள்ளை அரிசியை நாம் தேர்வு செய்வதை கைவிட்டு, மாப்பிள்ளை செம்பா, கருப்பு கவுணி, பூங்கார், தூயமல்லி செம்பா, காடைக்கண்ணி உள்ளிட்ட மரபு அரிசியை நாம் தேர்வு செய்ய வேண்டும். வெறும் அரிசியோடு நிற்க கூடாது.  கம்பு, சோளம், குதிரைவாலி, வரகு, சாமை, தினை, பனி வரகு ஆகியவற்றையும் நாம் சாப்பிட வேண்டும். இதை மீண்டும் மீண்டும் சொல்வதற்கு காரணங்கள் இருக்கிறது.

 அரிசி மற்றும் கோதுமைதான் பிரதான உணவு  என்று உணவு அரசியல் முன்னிருத்தி உள்ளது. பொன்னி  அரிசிதான் எல்லோரும் சாப்பிடுகிறார்கள். நெல் ஜெயராமன் மற்றும் நம்மாழ்வார் போன இடங்களில் எல்லாம் அரிசி மற்றும் நவதானியங்களை சேமித்து வைத்திருக்கிறார்கள். 89 மற்றும் 92-களில் சிறுதானியத்தைப் பற்றி பேசியபோது அனைவரும் சிரித்தனர். இன்று மத்திய அரசு சிறுதானியங்களுக்கு தனியான பிரிவு வந்துவிட்டது. 27 நாடுகள் சிறுதானியங்களை சாப்பிட வேண்டும் என்று அறிவித்துவிட்டது” என்று அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Avoid ponni rice and take these rice