தோசை வெளியே முருகலாகவும், உள்ளே மிருதுவாக வர வேண்டும் என்றால் நாம் சில முக்கியமாக விஷயங்களை செயல்படுத்த வேண்டும்.
முதலில் தோசை மாவு அதிக கட்டியாகவோ அல்லது தண்ணீராகவோ இருக்க கூடாது. அப்படி கட்டியாக இருந்தால் தோசை வேகாமல் போய்விடும். தண்ணீர் ஆக இருந்த மொறு மொறுப்பு தன்மை அதிகமாகும்.
சரியாக புளிக்க வைக்காமல் இருப்பதும் ஒரு காரணம். மாவு அரைத்ததும் 8 முதல் 12 மணி நேரம் ஊற வேண்டும். நாம் அரைத்ததை விட இரண்டு பங்கு அதிக மாவு அதிகம் வர வேண்டும் . அதுபோல சுவையில் சற்று புளிப்பு இருக்கும். மேலும் மாவு புளிக்கும்போது தனித்துவமான ஒரு மணம் வரும்.
அதிக எண்ணெய் பயன்படுத்தினால், தோசையில் எண்ணெய் வழியும். குறைவாக எண்ணெய் பயன்படுத்தினால், தோசை கல்லில் ஒட்டிக்கொள்ளும்.
இதுபோல தோசை ஊற்றும்போது, சரியான அளவில் மாவை எடுக்க வேண்டும். அதுபோல தோசையை வட்டமாக செய்யும்போது, சரியான தடிமனில் பரப்பினால் மட்டுமே முருகலாக வரும்.
இதுபோல அடுப்பை மிதமான தீ மட்டும் அதிக தீக்கு நடுவில் வைத்துதான் சுட வேண்டும். அதிக தீயில் சுட்டால் நிச்சயம் தோசை கருகிவிடும்.
இந்நிலையில் தோசை சுடுவதற்கு சற்று முன்பு, மாவில் உப்பு சேர்த்தால், அதிகம் புளிக்காது. தோசை சுடும்போது அதன் ஓரங்களில் நிச்சயம் நல்லெண்ணை அல்லது ஏதேனும் ஒரு சமையல் எண்ணெய்யை பயன்படுத்தவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil