/tamil-ie/media/media_files/uploads/2022/10/garlic_200_getty.jpg)
Garlic milk health benefits
பூண்டு பால், பல மருத்துவ குணங்கள் நிறைந்து. பூண்டு பாலில் இயற்கையான வலிநிவாரணி பண்புகள் இருப்பதாகவும், சியாட்டிகா மற்றும் ஆர்த்ரிடிஸ் போன்ற வலிமிகுந்த நிலைகளுக்கு சிறந்தது என்றும் கூறப்படுகிறது.
பூண்டு பால் செரிமான அமைப்பை சரி செய்கிறது மற்றும் மலச்சிக்கலைப் போக்குகிறது. அஜீரணம், அமிலத்தன்மை மற்றும் வாயு போன்ற நிலைகளுக்கு இது ஒரு சக்திவாய்ந்த தீர்வாகும். பூண்டு ஆண்டிசெப்டிக் பண்புகளையும் கொண்டுள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கான சிறந்த மூலப்பொருளாக அமைகிறது.
பூண்டு பால் செய்வது எப்படி?
ஒரு கடாயை எடுத்து அதில் பாலை ஊற்றி கொதிக்க வைக்கவும். அதில் 3-4 தோல் நீக்கிய பூண்டுப் பற்களைச் சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்கவும். பிறகு, அதில் 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூளுடன் ஒரு சிட்டிகை கருப்பு மிளகு சேர்த்து நன்கு கிளறவும்.
மீண்டும் ஒருமுறை கொதிக்க வைத்து தீயை அணைக்கவும். பால் சூடாக இருக்கும் போது, ஒரு டம்ளரில் வடிகட்டி, அதில் 1/2 டீஸ்பூன் தேன் கலந்து சூடாக குடிக்கவும்.
பூண்டு பாலின் ஆரோக்கிய நன்மைகள்
பூண்டு பால் முதுகு, கீழ் முதுகு, பிட்டம் மற்றும் கால்களில் வலி உள்ளவர்களுக்கு ஒரு அமுதம். கீழ் முதுகில் இருந்து இடுப்பு, பிட்டம் மற்றும் ஒவ்வொரு கால் வரை செல்லும் சியாட்டிகா வலி உள்ளவர்களுக்கும் இது ஒரு சிறந்த தீர்வாகும்.
இவை மட்டுமல்ல, பூண்டு பால் இருமல், ஆஸ்துமா, காசநோய், நிமோனியா மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றை குணப்படுத்துவதாக அறியப்படுகிறது.
இந்த பாலை தொடர்ந்து குடித்து வந்தால் ஆண், பெண் இருபாலருக்கும் மலட்டுத்தன்மையை தடுக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், யாராவது நன்றாக தூங்கவில்லை என்றால், இந்த பால் அதிசயங்களைச் செய்யும், ஒரு வாரத்திற்கு 1/2 கப் இந்த பாலை எடுத்து, மாற்றங்களைப் பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.